நியூயார்க்: அமெரிக்காவில் சர்வதேச விமானநிலையத்தில் மர்ம மனிதன் நுழைந்துள்ளதால் அவனை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் ஆங்காங்கே நிறுத்தி வைத்து கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் முதல் அங்கு பாதுகாப்பு பலமுனை கட்டங்களாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக விமான நிலையங்கள் கடும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் பதிவு : இந்நிலையில் நியூயார்க் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள நியூஜெர்ஸி விமான நிலையம் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள செக்போஸ்ட்டில் இருந்து பாதுகாப்பையும் மீறி ஒரு பிரமுகர் விமான நிலையத்தில் நுழைந்துள்ளார். இது பாதுகாப்பு துறை வீடியோ மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். உடனடியாக பயணிகள் ஆங்காங்கோ நிறுத்தப்பட்டனர். விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம மனிதனை தேடும் பணி நடந்து வருகிறது. செக்பாய்ன்ட் வழியாக இந்த மர்ம மனிதன் பாதுகாப்பு படைவீரர்களின் கண்ணை மூடி பயணிகளோடு, பயணியாக நுழைந்து சென்றிருப்பதாக அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., தெரிவித்துள்ளது. மர்ம மனிதனை தேடும்பணி காரணமாக அங்கிருந்து விமானங்கள் எதுவும் கிளம்பவில்லை. பயணிகள் பலர் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
விமானத்தில் வந்த நைஜீரிய இளைஞன் : கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த நைஜீரிய இளைஞர் ஒருவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அல்குவைதாவுடன் தொடர்பு உடையவன் என்றும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் இருந்த வீரர் சக வீரர்களை சுட்டு கொன்றார். ஈராக்கிற்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல மனம் இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப்பட்டது. ஆப்கனில் பணி செய்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆப்கனில் சி.ஐ.ஏ., அதிகாரிகள் சிலர் கொல்லப்ப்பட்டனர்.
தூதரகம் மூடல் : பாதுகாப்பு காரணமாக ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மூட முடிவு செய்துள்ளதுஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்குவைதாவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இங்கு காலி செய்வதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 2001 ம் ஆண்டில் செப்டம்பர் 11 தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் இருந்து அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையம் உயர்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்து.
14 நாட்டு விமானத்தில் பயங்கரவாதிகள்: ? அமெரிக்கா வந்து செல்லும் 14 நாட்டு விமானங்கள் முக்கிய கவனத்தில் எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கன், அல்ஜீரியா, ஈராக், லெபனான், லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, சோமாலியா, ஏமன், ஆகிய 10 நாட்டு விமானங்கள் உன்னிப்பாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த விமானம் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படும். மேலும், கியூபா, ஈரான், சடான், சிரியா ஆகிய 4 நாடுகளும் இந்தப்பட்டியலில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது.
சமீபத்தில் விமான நிலையங்களில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். இதனால் பல நாட்டு பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தற்போதைய நியூயார்க் விமான நிலையத்தில் மர்ம மனிதன் நுழைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment