Thursday, January 7, 2010

தேசிய தலைவரின் தந்தை காலமானார்

 

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை கொழும்பில் காலமானார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பிரத்தியேகமான இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைவரின் தாய் மற்றும் தந்தை இருவரும் இராணுவத்தால் கொழும்பில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவர்கள் இருவரும் 4 ம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 4 ம் மாடியில் இருந்தே வேலுப்பிள்ளை அவர்கள் இறந்துள்ளார் என்ற ஊர்ஜிதமற்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிறிதொரு தகவலின் படி இலங்கை இராணுவத்தின் பனாகொட இராணுவத்தடுப்பு முகாமில் வைத்தே இவர் மரணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

86 வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் எந்த நோய்த்தாக்கம் காரணமாக இறந்தார் என்பது குறித்தோ, அல்லது அவருக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது என்பது குறித்தோ இராணுவம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வெறுமனவே இயற்கை மரணம் எய்தினார் என்று கூறியுள்ளது.


தேசிய தலைவரின் தந்தையின் பூத உடலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பேற்று, தக்க மரியாதையுடன் அவர் உடலைத் தகனம்செய்வதே தமிழ் மக்களாகிய நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகும். இதனைச் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தயாரா என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. இந்த வரலாற்றுக் கடமையை தமிழ் தேசிய கூடமைப்பினர் காலத்தின் கட்டாயம் கருதி மேற்கொள்வார்கள் என நம்புகிறோம்.




source:athirvu
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails