Thursday, January 21, 2010

6,000 ஒட்டகங்களை எங்களிடம் தாருங்கள்


 
 துபாய் : "உங்கள் நாட்டிலுள்ள ஒட்டகங்களைக் கொல்லாதீர்கள்; அவற்றை நேசிக்கும் எங்களிடம் அனுப்பி விடுங்கள்' என்று, ஆஸ்திரேலிய அரசிடம் சவுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் உள்ளன. இவை, அந்நாட்டு விலங்கு அல்ல, ஆப்கானிஸ்தானிலிருந்து முன்பு 1840ல், ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை.

போக்குவரத்து பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட அவை, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டு மடங்கு பெருகி விட்டன. இதனால், வடக்குப் பகுதியில் உள்ள 6,000 ஒட்டகங்களை அடுத்த வாரத்தில் கொன்று அழித்து விடப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, ஒட்டகங்களை மிகவும் நேசிப்பவர்களான சவுதி மக்கள், இணையதளம் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், "ஒட்டகங்களைக் கொல்லாதீர்கள்; அவற்றை எங்களிடம் அனுப்பி விடுங்கள்' என்று கூறி வேண்டுகோள் விடுத்துள்ளனர்

source:dinamalar



மேலதிக செய்திகள்



விருத்தாச்சலம் கிளையில் கூட்டுக் குர்பானியாக ஓட்டகம்! 

DSC_0293தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளை சார்பாக கூட்டுக்குர்பானகியாக ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஒட்டக இறைச்சி அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது!

.tntj.net



 
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails