லண்டன் : பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதாக மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது என, பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த அமெரிக்க பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகப்படியான போதை மருந்தை உட்கொண்டதால் இறந்ததாக கூறப்பட்டது. அதிகமான போதை மருந்தை கொடுத்ததற்காக அவரது டாக்டர் கொன்ராட் முரே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே லண்டனிலிருந்து வெளிவரும், "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகை, மைக்கேல் ஜாக்சனின் இறப்பு சான்றிதழில், "அவர் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது. மைக்கேல் ஜாக்சனுக்கு கடைசியாக சிகிச்சையளித்த டாக்டர் செர்ரி மேக் வில்லி, அவரது இறப்புக்கான காரணம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், ஆகஸ்ட் மாதம் மைக்கேல் ஜாக்சனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர் கிறிஸ்டோபர் ரோஜர், "இந்த சாவு அப்பட்டமான கொலை' என, இறப்பு சான்றிதழில் திருத்தி எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சான்றிதழின் நகலையும் இந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.
"மைக்கேல் ஜாக்சன் உடல் நிலை மோசமான நிலையில் இருந்த போது கடுமையான போதை மருந்தை கொன்ராட் முரே அவருக்கு செலுத்தியுள்ளார். இதனால் தான் மைக்கேல் ஜாக்சன் இறந்துள்ளார். எனவே, மற்றவர் மூலம் செலுத்தப்பட்ட கொடிய போதை மருந்தால் ஜாக்சன் இறந்ததால் இது கொலை தான்' என, மருத்துவ ஆய்வாளர் கிறிஸ்டோபர் ரோஜர் குறிப்பிட்டுள்ளதாக, இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment