தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் - 2000ல் சில திருத்தங்கள் சமீபத்தில் செய்யப்பட்டன. அதன்படி, செக்ஸ் தொடர்பான காட்சிகள், விஷயங்கள், இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.இச்சட்டம், 150 ஆண்டுகள் பழமையான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 292வது பிரிவை அடிப்படையாகக் கொண்டது. அப்பிரிவில் ஆபாசம் அல்லது காமத்தைத் தூண்டும் விஷயம் என்பதற்கு விளக்கமாக, "பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அல்லது கேட்பவர்களின் மனதில் காமத்தைத் தூண்டிவிட்டு ஒழுக்கத்தைச் சிதைக்கும் விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது. பல மத சம்பிரதாயங்கள் கோலேச்சிவரும் இந்தியாவில்தான் பிற நாடுகளை விட பாலியல் விஷயங்கள், இணையத்தில் தேடப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய சட்டத் திருத்தம், இணையதளங்களில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இணையதளத்தில் பிரபல தேடல் இயந்திரங்களான யாஹூ, பிளிக்கர் போட்டோ போன்றவற்றில் பாலியல் தொடர்பான ஆபாசமான காட்சிகள், செய்திகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கொரியாவிலும் இந்தக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட்டின் "பிங்' தேடல் இயந்திரமும் பாலியல் விஷயங்களைத் தருவதில்லை. சமீபத்தில் ஆந்திர கவர்னர் என்.டி.திவாரியின் மீதான பாலியல் புகார், ஒரு குடும்பப் பெண் தன் அந்தரங்கங்களை எல்லாரும் பார்க்கும்படியாக இணையதளத்தில் வெளியிட்டது, பின் மத்திய அரசு அதைத் தடை செய்தது போன்றவை, பாலியல் தொடர்பான விஷயங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்துவிட்டன என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
"இணையதள சேவை தருவோர் கழக'த்தின் (இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்ஸ் அசோசியேஷன்) தலைவர் ராஜேஷ் சாரியா கூறுகையில், "இந்தியக் கலாசாரத்துக்கு இவை எதிரானவை. இதுபோன்ற காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்' என்றார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment