சென்னை: விபத்தில் சிக்கிய பஸ் கண்டக்டர் மூளைச்சாவு நிலையை அடைந்தார். "அவரைக் காப்பாற்றத் தான் முடியவில்லை. அவர் மூலம் மற்றவர்கள் வாழட்டும்' என, குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.
சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜன்பாபு(49); மாநகர போக்குவத்து துறை, மாதவரம் டிப்போவில் கண்டக்டராக பணிபுரிந்தார். புத்தாண்டு தினத்தில் செங் குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் (தடம் எண்:592) பஸ்சில் கண்டக்டராக சென்றார். ஊத்துக்கோட்டை அருகே பஸ் சென்றபோது, பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார். படிக்கட்டு அருகே நடந்து சென்றபோது, திடீரென டிரைவர் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி படிக்கட்டு வழியாக உருண்டு கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு, ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். உயிரைக் காப்பாற்றுவது கடினம் என, டாக்டர்கள் கைவிரித்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் ராஜன்பாபு "மூளைச் சாவு' நிலையை அடைந்தார். உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என உணர்ந்த அவரது மனைவி கஸ்தூரி மற்றும் உறவினர்கள்,"அவர் தான் உயிரோடு இல்லை; அவரது உடல் உறுப்புக்களால் மற்றவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்' எனக் கூறினார். இதையடுத்து, நேற்று ராஜன்பாபுவின் இதயம், கல்லீரல், கிட்னி உள்ளிட்டவை அகற்றப்பட்டு, ஏற் கெனவே சிகிச்சைக்கு தயாராக இருந்தோருக்கு, பொறுத்தும் பணியில் டாக்டர்கள் குழு ஈடுபட்டது. ராஜன்பாபு மனைவி கஸ்தூரி கூறுகையில்,"என் கணவர் சாகவில்லை. இறந்தும் மற்றவர்கள் மூலமாக உயிர் வாழ்கிறார்' என்றார்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment