ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலின் உள்ளே எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா , ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஹோட்டலுக்குள் இருந்து தமது தோல்வியை மறைப்பதற்காக சூழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டமையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது கிடைக்கப்பெறும் தகவலின்படி சுமார் 200 இலங்கை இராணுவத்தினர் ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதாகவும், அங்கிருந்து எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.
சரத்பென்சேகாவின் பாதுகாப்புப் படைப் பிரினருக்கும் அவர்களை சுற்றிவளைத்துள்ள இலங்கை இராணுவ படைப்பிரிவிற்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சரத்பொன்சேகாவை பாதுகாக்கும் பிரிவினர் தொடர்ந்தும் அவரை பாதுகாத்து வருவதால் சுற்றி வளைத்திருக்கும் இராணுவத்தினர் உட் புக முடியாத நிலை காணப்படுவதாகவும் நேரில் கண்ட சிலர் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி, மற்றும் கோத்தபாயவின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாக்குகள் தற்போதும் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்திலும், வெற்றி தோல்வி நிச்சயமற்ற இத் தருணத்தில் சரத்பொன்சேகாவை தடுத்துவைத்திருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
அத்துடன் இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்தால் கூட அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்ச்சியில் மகிந்த சகோதரர்கள் ஏற்கனவே ஈடுபட்டு இருந்த்தாக செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
source:athirvu
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment