Wednesday, January 20, 2010

ஒரு சைக்கிளின் விலை ரூ.2 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?

 

நெல்லையில் மஜூரா கேஎஸ்ஆர் என்ற நிறுவனம் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிரபல நிறுவனங்களில் சைக்கிள்களை விற்பனை செய்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான விலையில் சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சைக்கிள்களை ஹெர்குலஸ் பிஎஸ்ஏ நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறது. கேனான்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான சைக்கிளின் விலை ரூ.35 ஆயிரம். இந்த சைக்கிள் முற்றிலும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால் இந்த சைக்கிள் மிகவும் எடை குறைந்தவை. எளிதாக ஓட்ட முடியும். இந்த சைக்கிள்களில் மொத்தம் 24 கியர்கள் உள்ளன. செல்லும் வேகத்தை பொறுத்து கியர்கலை மாற்றி கொள்ளலாம். இந்த சைக்கிள்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். வேகமாக செல்லும் இந்த சைக்கிள்களை உடனே நிறுத்தும் வகையில் டிஸ்க் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. பிரேக் பிடித்த இடத்தில் இந்த சைக்கிள் நிற்கும். கேனான்டெல் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ராஷ்-7 என்ற சைக்கிள் விலை 85 ஆயிரம் ரூபாயாகும். இந்த சைக்கிளை சமீபத்தில் நெல்லையை சேர்ந்த ஒரு டாக்டர் வாங்கி உள்ளார். மேலும் இத்தாலியை சேர்ந்த பாயன்சி என்ற நிறுவனத்தின் 900 எக்ஸ்டி, கார்பன் என்ற சைக்கிளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த வகை சைக்கிள்களை வாங்க ஆர்டர் கொடுக்க வேண்டும். இந்த வகை சைக்கிள்கள் தற்போது இருப்பு இல்லை. இந்த சைக்கிள்கள் குறித்த தகவல் பெற்று தற்போது அதனை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

SOURCE:dinakaran

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails