மருத்துவத் துறையில் சென்னை எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி... இராக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இப்ராஹிம் நூரி. அவருக்கு ஐந்து சகோ தரிகள். குடும்பத்தைக் காப்பாற்ற இராக் ராணுவத் தில் சேர்ந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன் இரு குழுக்களுக்கு இடையே கலவரம் வெடித்தபோது பாதுகாப்புப் பணியில் இருந்த நூரியின்மீது எங்கி ருந்தோ பறந்து வந்த துப்பாக்கிக் குண்டு அவருடைய பின் மண்டையில் துளைத்து, வலது கண் வழியாக வெளியேறியது. குண்டு துளைத்ததில் வலது கண் ணுக்குக் கீழே ரத்தக் குழாய்கள், கண் நரம்புகள், எலும்புகள் சிதைந்துவிட்டன. வலது கண் இறங்கி விட்டது. இராக்கில் அவருக்குமுதலு தவி மட்டும் செய்து அனுப்பி விட்டார்கள். பல இடங்களில் விசாரித்து, கடைசியாக சிகிச் சைக்கு நூரி வந்து இறங்கிய இடம்... பாலாஜி பல் மற்றும்முகச் சீரமைப்பு மருத்துவமனை. அங்கே நூரியின் முகத்தை ஆராய்ந்த டாக்டர் பாலாஜி, உடைந்த எலும்புகளுக்குப் பதில் டைட்டானியம் தகடுகள் பொருத்த முடிவு செய்தார். ஆபரேஷனில் வலது கண்ணை மேலே தூக்கி, அதற்குக் கீழே டைட்டானியம் தகடுகள் பொருத்தி, நூரியின் முகத்தை இயல்பான தோற்றத்துடன் சீரமைத்து விட்டார் பாலாஜி. இந்த அபூர்வமான ஆபரேஷன்பற்றி டாக்டர் பாலாஜியிடம் பேசினேன். ''நூரி வரும்போது அவர் மனசில் நம்பிக்கையே இல்லை. நாலு மணி நேரம் ஆபரேஷன் பண்ணி, நூரியோட முகத்தைச் சீரமைச்சோம். இந்த ஆபரேஷனை அமெரிக்காவில் பண்ணியிருந்தால் 25 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாகி இருக்கும். இங்கே வெறும் 65 ஆயிரம் ரூபாய்தான் சார்ஜ் பண்ணினோம். குறைந்த கட்டணத்தில், சர்வதேசத் தரத்தில் ஆபரேஷன்கள் செய்வதால், வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் இருந்து நிறைய பேர் சென்னைக்கு வருகிறார்கள். நம்மை நம்பி வருகிறவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கட்டணத்தைக் குறைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகிறோம். ஆபரேஷன் முடிந்துநூரி கிளம்பும்போது, அவரால் பேசவே முடியலை. ''என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சேன். நான் நல்லா இருந்தாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை''ன்னு அழுதார். நூரியோட அம்மா ''நீங்க இராக் வாங்க. நாங்க உங்களைப் பத்திரமா பார்த்துக்கிறோம்''னு கையைப் பிடிச்சுக் கேட்டாங்க. இந்த அன்புக்கு முன்னாடி பணமெல்லாம் ஒரு விஷயமா சார்?''- குரல் நெகிழ்ந்து கேட்கிறார் டாக்டர் பாலாஜி! |
No comments:
Post a Comment