Wednesday, January 6, 2010

பீதி கிளப்பாதீர்கள் : ஆஸி., கெஞ்சல்


 மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம், என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது கடந்த ஓராண்டாக தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக, கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நிதின் கார்க்(21) மெல்போர்ன் நகரில் உள்ள ஓட்டலில் பகுதி நேர வேலைக்கு சென்ற போது வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்துக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலால் அங்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் க்ரையேன் குறிப்பிடுகையில், "ஆஸ்திரேலியா பாதுகாப்பான நாடு என்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஒப்பு கொண்டுள்ளன. வழக்கமாக கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் ஏற்படும் தகராறில் சிலர் தாக்கப்படுவது வழக்கம். அந்த விதத்தில் தான் நிதின் கொலையும் நடந்துள்ளது. கொலை நடக்காத நகரம் எங்கும் இல்லை. மும்பை, டில்லியில் கூட கொலைகள் நடக்கின்றன. எனவே, நிதின் கார்க் கொலையை பற்றி பேசி, இந்திய தலைவர்கள் பீதி கிளப்ப வேண்டாம். இதனால், பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails