டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனம் உங்களுடைய லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் டிவி நிகழ்ச்சியை லைவாகப் பார்க்கும் வசதியைத் தருகிறது. இந்நிறுவனம் வழங்கும் இன்டர்நெட் இணைப்பினைத்தரும் டாட்ட போட்டான் ப்ளஸ் (கூச்tச் கடணிtணிண கடூதண்) தற்போது டிவி பார்க்கும் வசதியுடன் தரப்படுகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி இருக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ்,நியூஸ், பொழுதுபோக்கு மற்றும் அந்த அந்த இடங்களில் பிரபலமான சேனல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ஒளிபரப்பப்படும் நேரத்திலேயே கிடைக்கும். இவற்றுடன் ஏற்கனவே ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் பதிவு செய்யப்பட்டு, பட்டியலிடப்பட்டு தரப்படுகின்றன. இவற்றிலிருந்தும் நீங்கள் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
டிவி சேனல் நிகழ்ச்சிகளை சந்தா கட்டிப் பெறலாம். மூன்று வகையான சந்தா முறை உள்ளது. ரூ.5 செலுத்தினால் ஒரு மாதத்திற்கு ஒரு சேனல் பார்க்கலாம். 10 சேனல்கள் அடங்கிய தொகுப்பு காண ரூ. 29 செலுத்த வேண்டும். அனைத்து சேனல்களையும் பார்க்க ரூ.75 செலுத்த வேண்டும். இவை தவிர டேட்டாவிற்கான தொகையை இன்டர்நெட் வசதிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளபடி செலுத்த வேண்டும்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment