ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி! - இதுதான் புரட்சியாளர்களுக்குக் கிடைக்கும் பரிசு. பெரும்பாலான புரட்சிகள், ஒன்று தோல்வியில்ஆரம்பிக் கின்றன அல்லது தோல்வியில் முடிகின்றன. மாவோ, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற பலரின் புரட்சிகள் தோல்வியில்தான் தொடங்கின. இந்தியச் சுதந்திரத்தின் பின்னேகூட சிப்பாய் கலகம், கதர் போராட்டம் (இங்கே கதர் என்றால் கிளர்ச்சி என்று அர்த்தம்), கிலாபத் கிளர்ச்சி எனப் பல புரட்சிகள் தோற்றுப்போயிருக்கின்றன. உலகின் மிக அதிகப் புரட்சிகளை வெற்றிபெறவைத்தது யார் தெரியுமா? மாணவர்கள்! இதனாலேயே 'மாணவர்கள் களம் இறங்கினால் எந்தப் புரட்சியும்வெற்றி பெறும்' என்று 1989 வரை உலகமே நம்பிக் கொண்டு இருந்தது. அந்த கான்செப்ட்டை பீரங்கி ஏற்றி நசுக்கியது சீனா. சீன பொது உடைமைக் கட்சியின் அரசியல் மற்றும்பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பெய் ஜிங்கின் தியாங் மென் சதுக்கத்தில் 1989-ல் மாணவர்கள் ஒன்றுகூடினார்கள்.மாணவர் களை மிரட்ட பீரங்கிகளைக் களம் இறக் கியது சீனா. நிராயுதபாணியான மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது. ரத்தக்களறி ஆனது சதுக்கம். '200 பேர்தான் இறந்தார்கள்' என்கிறது சீனா. 'இது பச்சைப் பொய். மூவாயிரம் மாணவர்கள் வரை கொல்லப்பட்டார்கள்' என்றது சீன மாணவர்கள் சங்கம். உலக நாடுகள் சீனாவுக்குக் கடும் கண்டனம் தெரி வித்தன. உலகிலேயே அதிகம் கவனிக் கப்பட்டு தோல்வியில் முடிந்த புரட்சி இதுதான். இறப்புக்குப் பிறகு கொண்டாடப் படும் புரட்சியாளர்கள் வாழும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் நிறைய. ஜெர்மானிய வரலாற்றில் 'தி கிரேட் ஆர்லாண்டோ மொசார்ட்டோ' (உயர்ந்த புரட்சி வீரன்) என்றுகொண் டாடப்படும் நேதாஜி, வாழும்காலத் தில் இந்தியா முழுக்கப் புரட்சிக்கு ஆதரவு தேடி அலைந்தார். உலகில் தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கப் பெற்ற மிகச் சில புரட்சியாளர் களில் லெனினும் ஒருவர். 'புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள்' என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறார் லெனின்! உண்மைதானே? இரா.மன்னர் மன்னன் புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! - ஹெச்.ஜி.வெல்ஸ் |
|
No comments:
Post a Comment