Thursday, January 21, 2010

பொது இடங்களில் பர்தா : பிரான்சில் அபராதம்


பொது இடங்களில் பர்தா : பிரான்சில் அபராதம்

 

பாரிஸ் :   "பிரான்சில் பொது இடங்களில் பர்தா  அணிந்து நடமாடினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம்  பிரான்ஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா  அணிவது அடிமைத் தனத்தைக் குறிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் பிரான்சில், இதுபோன்ற உடைகளை அனுமதிக்க முடியாது' என்று அறிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனம் வந்தாலும், இம்மாதம் முதல்வாரத்தில் பிரான்ஸ் பார்லிமென்டில், "பொது இடங்களில் பர்தா  மற்றும் நிக்கா  உடை அணிந்து வந்தால், 51 ஆயிரம் ரூபாய் (750 யூரோ) அபராதம் விதிக்கப்படும்' என்ற மசோதா கடும் வாக்குவாதங்களுக்கிடையில் சட்டமாக  நிறைவேற்றப்பட்டது.
அதிபர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் கோப் இது குறித்து கூறியதாவது: உடலை முழுவதுமாக மறைத்து, கண்களுக்கு மட்டும் திரையிடும் பர்தாவுக்கும், உடலை மறைத்து கண் மட்டும் தெரியும் வகையில் உள்ள  நிக்கா உடைக்கும் இந்த அபராதம் பொருந்தும். கலாசார விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. இந்த சட்டம் மத அடிப்படையில் அல்ல. மத மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த அறிஞர்களிடம் நாங்கள் பேசிய போது, பர்தா  என்பது மத அடிப்படையில் உருவானதல்ல என்று அவர்கள் உறுதிபடுத்தினர். இவ்வாறு கோப் தெரிவித்தார்.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails