|
|
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. |
அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை. இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூபணமாகிறது. பெண்களைத் தாயாக, சகோதரியாக, தெய்வமாக கருதும் தமிழ் பண்பாட்டில் வளர்ந்த எவரும் இத்தகைய ஈனச்செயலை மன்னிக்கமாட்டார்கள். புலம்பெயர் வாழ்மக்களே!! மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை இலங்கையில் நடந்த சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.மன்றம் விசாரணைகளை நடத்தவேண்டும் என ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கபடுபவர்களுக்காக வழக்குகளில் வாதாட முன்வந்துள்ள வழக்குரைஞர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன புகார்கள் குறித்து ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஆசிய மனித உரிமை இயக்கம் ஐ.நா மன்ற தலைமைச்செயலரிடம் கோரியுள்ளன. |
No comments:
Post a Comment