Friday, December 19, 2008

ஈராக்கிய மருத்துவருக்கு ஆயுள் சிறைவாசம் கிடைக்கலாம்

 

  •  லண்டன், கிளாஸ்கோ நகரங்களில் தொடர் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் களை நடத்தச் சதி செய்த குற்றம் புரிந்ததாக ஈராக்கிய மருத்துவர் ஒருவர் பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.
    பிலால் அப்துல்லா என்ற அந்த மருத்துவர் கொலை செய்யச் சதி புரிந்ததாகவும், வெடிபொருட்களை வெடிக்கச் செய்ய சதி செய்ததாகவும் குற்றம் புரிந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    பிரிட்டனில் வேலை பார்க்கும் முகமது ஆஷா என்ற மற்றுமொரு ஜோர்டானிய மருத்துவர், இதே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
    கிளாஸ்கோ விமான நிலையத்தின் பிரதான வாயிலுக்குள் எரிந்து கொண்டிருந்த ஜீப் ஒன்றை ஓட்டிச்சென்று தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்தக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட முயற்சியின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    கிளாஸ்கோ சம்பவத்துக்கு முதல் நாள், லண்டனில் இரவு விடுதி ஒன்றிலும், பஸ் நிறுத்துமிடம் ஒன்றிலும் கார் குண்டு வெடிப்புகள் நிகழ்த்த முயற்சி நடந்தது. அதிலும் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails