Monday, December 8, 2008

இந்து - கிறிஸ்தவர் திருமணம் செல்லாது

     
 
இந்து திருமண சட்டத்தின்படி ஒரு இந்துவுக்கும் ஒரு கிறிஸ்தவருக்கும் நடைபெறும் திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குல்லிபுல்லி சவுரிய ராஜ் என்பவர் தன்னை இந்து என்று கூறி கடந்த 1996ம் ஆண்டு பண்டாரு பவானி என்பவரை கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின்னர்தான் பவானிக்கு அவர் கிறிஸ்தவர் என்று தெரியவந்தது.
உடனே அவரை விவாகரத்து செய்ய குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடும்ப நீதிமன்றம் இந்து திருமண சட்டத்தின்படி யாரேனும் ஒருவர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தால் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து பவானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திரா உயர்நீதிமன்றம் பவானியின் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சவுரிய ராஜ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அல்தமாஸ் கபீர் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர், இந்து திருமண சட்டத்தின்கீழ் மணமக்கள் இருவரும் இந்துவாக இருந்தால்தான் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

 

 

1 comment:

Unknown said...

Best Christian Matrimony in tamilnadu visit: Christian matrimony

Best Christian Matrimony in tamilnadu visit: கிறிஸ்தவர் தி௫மண தகவல் மையம்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails