Saturday, December 13, 2008

புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு

புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு
இப்போது பெட்ரோல்,டீசலால் ஓடும் கார்கள் இனி வருங்காலத்தில் ஹைட்ரஜன் பந்துகள் மூலம் இயங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகள்தான் கிடைக்கும்.

எனவே சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிசக்தியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் சுவீடன் நாட்டில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் மெட்டிரீயல்ஸ் சயின்ஸ் துறையின் பேராசிரியர் லார்ஸ் ஸ்டென்மார்க் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அதன்படி ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட சிறிய பந்துகளை கொண்டு கார்களை இயக்க முடியும் என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

அவருடைய இந்த கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக நடைமுறைக்கு வரும்போது தற்போது போக்குவரத்துக்கு பெட்ரோல்டீசலை பெரிதும் சார்ந்திருப்பது பெருமளவில் குறையும்.சிறிய பந்துகளில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்புவதன் மூலம் தீ விபத்து மற்றும் வெடி விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று ஸ்டென்மார்க் தெரிவிக்கிறார்.

வட்ட பந்து வடிவில் ஹைட்ரஜன் வாயுவை சேமித்து வைப்பதானது நீள உருளைகளில் சேமித்து வைப்பதைக் காட்டிலும் இரு மடங்கு அழுத்தத்தை தாங்கக்கூடியது.

கார் புறப்பட்டதும் இந்த பந்துகள் உடைந்து அதில் நிரப்பப்பட்ட வாயு வெளியேறி கார் இயங்குவதுடன் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாமல் அந்த வாயு வளிமண்டலத்தில் கலந்து விடும் என்று அவர் தெரிவிக்கிறார்.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் மனித குலத்துக்கு இது போன்ற ஒரு நல்ல மாற்று எரிபொருள் தேவைதான்.விரைவில் இது நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1229161369&archive=&start_from=&ucat=2&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails