Friday, December 19, 2008

சிலி நாட்டில் நிலநடுக்கம்:வீடுகள் குலுங்கின

 
 
lankasri.comதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் இன்று அதிகாலை திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது.தலைநகர் சான்டியாகோ அருகே உள்ள வால்பராசியோ மற்றும் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3-ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நில நடுக்கத்தால் உயரமான கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.சில மாடி கட்டிடங்கள் இப்போது சாய்ந்த கோபுரம் போல் சரிந்த நிலையில் காணப்படுகிறது.அந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடினார்கள்.ஒரு சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.

இன்னும் சில வீடுகள் இடிந்து விழுந்தன.ஆனாலும் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.கடலுக்கு அடியில் 21.7 மைல் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல இந்தோனேஷியாவின் மாலுக்கு தீவுப்பகுதியிலும் நேற்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டு வீடுகள் குலுங்கின.5.2 ரிக்டர் அளவில் பதிவானது.ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229680749&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails