Saturday, December 13, 2008

பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளின் வளிமண்டலத்தில் நீராவி

பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளின் வளிமண்டலத்தில் நீராவி
lankasri.comநாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளொன்றின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதற்கான சான்று தமக்குக் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் "நேச்சர்" விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. "சூடான வியாழன்" என்றழைக்கப்படும் மேற்படி கோளின் மேற்பரப்பின் வெப்பநிலை 900 பாகை செல்சியஸாகும். மேலும் நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வின் பிரகாரம், இந்தக் கோளின் மேற்பரப்பில் காபனீரொட்சைட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"சூடான வியாழன்" என செல்லமாக அழைக்கப்படும் "எச்.டி 189733 பி' என்ற இக்கிரகமானது எமது சூரியமண்டலத்திலுள்ள வியாழக் கிரகத்தின் வளிமண்டலத்தை ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

"சூடான வியாழன்" கிரகத்தின் வெப்பமான மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட வெப்பக் கதிர்ப்பு காரணமாக, அக்கிரகத்தின் வளிமண்டலத்தில் கனமான காற்றோட்டம் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கோளானது அதி நவீன "ஹபின்" விண்வெளி தொலைகாட்டியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தக் கண்டுபிடிப்பானது மனித வாழ்க்கைக்கு பொருத்தமான கோள்கள் அண்டவெளியில் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1229013125&archive=&start_from=&ucat=2&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails