Wednesday, December 17, 2008

இலங்கை சிங்கள படையில் சிறுவர்கள் : வீடியோ ஆதாரம்

 


இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இலங்கையில் வன்னி பகுதியில் நடைபெற்ற மோதலில், ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை கைப்பற்ற, அந்நாட்டு ராணுவம் பல்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சிக்குள் நுழையும் கடைசி கட்டமாக ராணுவத்தினர் முன்னேற புறப்பட்டனர்.

அப்போது ராணுவத்தினரை முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 130 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல் கிலாலியில் நடைபெற்ற மோதலில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் பலியான 36 ராணுவத்தினரின் உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கான வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். இதில் பலியான ராணுவத்தினர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களை இலங்கை ராணுவம் போருக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails