|
|
இஸ்ரோவின் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் டபிள்யூ2-எம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.வர்த்தக ரீதியில் பயன்படுத்தத்தக்க இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனமும் ஐரோப்பாவின் ஈட்ஸ் ஆஸ்ட்ரியம் நிறுவனமும் கூட்டாகத் தயாரித்திருந்தன. இச் செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள கெளரூ ஏவுதளத்தில் இருந்து ஐரோப்பிய ஏரியான்-5 ஏவுகலன் மூலம் காலை 4.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஏவப்பட்ட 32-நிமிடங்களில் டபிள்யூ2-எம் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவி இணை இயக்க வட்டப் பாதையை அடைந்தது.இதில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதாக ஹாஸனில் உள்ள இஸ்ரோவின் தலைமைக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். செயற்கைக்கோளின் சாதனங்களும் சிறப்பாக இயங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த செயற்கைக்கோளை ஏவும் திட்டத்திற்கான உடன்பாடு 2006-பிப்ரவரி 20-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தானது.இது வர்த்தக ரீதியில் பயன்படக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எடை மொத்தம் 3463-கிலோ. இஸ்ரோ தயாரித்துள்ள செயற்கைக்கோள்களில் அதிகமான எடை கொண்டது இது.சுமார் 15-ஆண்டுகள் தடையின்றி செயல்படும் திறன் உடையது.இதில் உள்ள சூரிய மின்விசைப் பகுதி அதிகபட்சமாக 7-ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது. |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1229968871&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment