Wednesday, December 10, 2008

பணியும் பாகிஸ்தான்- ஜமாத் உல் தாவாவுக்கு தடை?

  

Hafiz Muhammad Saeed
டெல்லி: லஷ்கர் இ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உல் தாவா அமைப்பை தடை செய்ய வேண்டும், இதுதொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டதன் எதிரொலியாக அந்த அமைப்பை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசேன் ஹாரூன் கூறுகையில், ஜமாத் உல் தாவா அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்யும் என்று தெரிவித்தார்.

நேற்று ஐ.நா. சபையில் பேசிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது, ஜமாத் உல் தாவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. இதுகுறித்து ஐ.நா. சபை கடுமையாக கண்டிக்க வேண்டும். அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஐ.நாவின் நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், பாகி்ஸ்தானே முன்வந்து ஜமாத் உல் தாவாவை தடை செய்ய முடிவு செய்து விட்டது.



இதுகுறித்து ஹாரூன் கூறுகையில், ஜமாத் உல் தாவா அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்யும். அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் என்றார்.

லஷ்கர் இ தொய்பாவின் மறு உருவம்தான் ஜமாத் உல் தாவா. லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு 2002ம் ஆண்டு தடை விதித்தது. இதையடுத்து ஜமாத் உல் தாவா என்ற பெயரைப் பயன்படுத்தி லஷ்கர் அமைப்பு இயங்கி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா எழுதிய கடிதத்தில், ஜமாத் உல் தாவா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்.

அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகம்மது சயீத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2008/12/10/india-pakistan-succumbs-to-ban-jamaat-ul-dawa.html
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails