Thursday, December 11, 2008

கிளிநொச்சி : சிங்கள படைக்கு பின்னடைவு

 


கிளிநொச்சியை பிடிக்க சிங்களராணுவம் 1 மாதமாக முற்றுகையிட்டு உள்ளது. 50 ஆயிரம் சிங்கள வீரர் கள் 3 முனைகளில் முன்னேறி கிளிநொச்சியை தாக்கினார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் அரண்போல் நின்று அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நின்றனர்.

நேற்று கிளிநொச்சியில் உள்ள புது முறிப்பு பகுதியை நோக்கி சிங்கள படையினர் 2 பகுதிகள் வழியாக முன்னேறி தாக்கி வந்தனர். அவர்களை சிறிது நேரம் முன்னேற விட்டு விடுதலைப்புலிகள் பிறகு திடீரென சிங்கள ராணுவம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் சிங்கள ராணுவம் நிலை குலைந்து போனது. இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. விடுதலைப்புலிகள் தாக்குதலில் ஏராளமான சிங்கள வீரர்கள் இறந்தனர் . மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் அவர் கள் முற்றுகையை கைவிட்டு பின் வாங்கி ஓடினார்கள்.

இந்த தாக்குதலில் 60 சிங்கள வீரர்கள் பலியானார்கள். 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியான சிங்கள வீரர்கள் பலரின் உடல்கள் பதுங்கு குழியில் சிதறி கிடந்தன.

இதே போல கிளி நொச்சியின் தெற்கு பகுதியில் உள்ள அறிவியல் நகரிலும் சிங்கள படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடும் சண்டை நடந்தது. இதிலும் சிங்கள படையினர் தாக்கு பிடிக்க முடியாமல் பின் வாங்கி ஓடினார்கள். இந்த சண்டையில் 29 சிங்கள வீரர்கள் பலியானார்கள் 60 பேர் படுகாயம் அடைந்தனர். இங்கு காலை 9 மணிக்கு தொடங்கிய சண்டை மாலை 6 மணி வரை நீடித்தது.

இரு சண்டையிலும் சேர்த்து 90 க்கும் அதிகமான சிங்கள வீரர்கள் பலியாகி உள்ளனர். 180 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

கிளிநொச்சி நகரை சுற்றி சிங்கள வீரர்கள் பதுங்கு குழிகளை அமைத்து இருந்தனர். அங்கிருந்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த இடத்தில் சென்று பார்த்த போது ஏராளமான சிங்கள வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சிங்கள படையினருக்கு நேற்று கிடைத்த மரண அடி பெரும் பின்னடையாக அமைந்துள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails