அண்டவெளியின் மத்தியில் இராட்சத கருந்துவாரம் |
எமது அண்டவெளியின் மையத்தில் இராட்சத கருந்துவாரம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக ஜேர்மனிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால்வெளியின் மையத்தில் 28 நட்சத்திரங்களால் சூழப்பட்ட பகுதியில் மேற்படி கருந்துவாரத்தை அவதானித்ததாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிலியிலுள்ள ஐரோப்பிய தெற்கு விண்வெளி அவதான நிலையத்திலுள்ள விண்வெளி தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட இந்தக் கருந்துவாரம் தொடர்பான தகவல்கள், "த அஸ்ரோபிஸிகல்" விண்வெளி விஞ்ஞான வெளியீட்டில் பிரசுரமாகியுள்ளன. கருந்துவாரமானது எமது சூரியனைவிட 4 மில்லியன் மடங்கு பருமனானது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதீத ஈர்ப்புத்தன்மை சக்தியைக் கொண்ட வஸ்துக்களை உள்ளடக்கிய இந்த கருந்துவாரமானது தன்னைச் சுற்றியுள்ளவற்றை உள்ளீர்க்கும் வலிமை கொண்டுள்ளது என்பதால் அபாயகரம் மிக்கதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கருந்துவாரமானது தன்னை அண்மித்துள்ளவற்றை உள்ளீர்ப்பதன் மூலம் போதிய அடர்த்தியைப் பெறுகையில், பெரும் சக்தி வெளிப்பாட்டு தாக்கங்கள் இடம்பெற்று நட்சத்திரமாக உருமாற்றம் அடைவதாக மேற்படி ஆய்வை மேற்கொண்ட ஜேர்மனிய மக்ஸ் பிளான்க் விண்வெளி ஆய்வுகூட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கருந்துவாரம் பூமியிலிருந்து 27,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 16 வருட ஆய்வையடுத்தே இந்த கருந்துவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment