வீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்கு லல்லு கண்டனம் |
வீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்கு லல்லு பிரசாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சந்தீப் உன்னி கிருஷ்ணனுக்கு கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் அஞ்சலி செலுத்த சென்றார்.இதை அவருடைய தந்தை தடுத்தார். கோபம் அடைந்த அச்சுதானந்தன் இவர் வீட்டுக்கு ஒரு நாய் கூட வராது என்று விமர்சித்து பேசினார்.இந்த வார்த்தை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி லல்லு பிரசாத் கூறியதாவது:- அச்சுதானந்தனின் இந்த விமர்சனம் மோசமான செயல்.இது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒரு வீரரை அவமதிப்பதாக உள்ளது.இதை யாராலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நான் இதை பெரிய விஷயமாக கருதுகிறேன்.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இதுபற்றி பேசி உள்ளேன்.அச்சுதானந்தன் தனது வார்த்தையை திரும்ப பெற வேண்டும். நாட்டில் உள்ள உளவுத்துறையை ஒட்டு மொத்தமாக கலைத்து விட்டு உளவு அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1228294192&archive=&start_from=&ucat=1& |
Wednesday, December 3, 2008
வீரர் குடும்பத்தை விமர்சித்த கேரள முதல்-மந்திரிக்கு லல்லு கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment