தீவிரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும், தக்க பதிலடி கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர், முசராபாத் சாலையில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி, மக்களின் நலன் கருதி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா தயாராக உள்ளது. அண்டை நாடுகளுடன் சுமூக உறவு கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா நட்புக்கரம் நீட்டுவதை யாரும் பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தீவிரவாதத்துக்கு எப்போதும் அடிபணிய மாட்டோம். அதற்கு தக்க பதலடி கொடுப்போம். நாட்டில் அமைதி சூழல் நிலவ எந்த கட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அதிலும் அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு அந்த பேச்சுவாத்தை இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
நாடு முழுவதும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. தங்களின் செயல்பாட்டை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறினார்.
No comments:
Post a Comment