Thursday, December 11, 2008

இலங்கை : புலிகள் தாக்குதலில் ராணுவத்தினர் 89 பேர் பலி

கிளிநொச்சி அருகே முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய இரு வெவ்வேறு தாக்குதலில், 89 ராணுவத்தினர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிக்கு மேற்கே முன்னேறி வந்த ராணுவத்தின் 57வது பிரிவினரை புலிகள் எதிர்கொண்டு தாக்கினர். இரணைமடு அருகே நடந்த தெருமுருக்கண்டி என்ற இடத்தில் நடந்த இந்த மோதலில் 60 ராணுவத்தினர் பலியானதாக தமிழ் நெட் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போல கிளிநொச்சிக்கு தெற்கே நடந்த மற்றொரு தாக்குதலில் சிங்கள ராணுவத்தினர் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களது உடல்களை இன்னும் ராணுவத்தால் மீட்க முடியவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் இந்த பதிலடி தாக்குதலால், ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின் வாங்கிவிட்டது. தப்பியோடிய ராணுவத்தினர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே மேற்கூறிய இரு இடங்களிலும் நிகழ்ந்த மோதலில் புலிகள் தரப்பில் 27 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails