பின்லேடனின் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் பல்வேறு நாடுகளில் கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது.ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி இருக்கும் பின்லேடன் அவ்வப்போது அவர்கள் தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்து வருகிறான். பெல்ஜியம் நாட்டின் புருசேல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாடு 2-நாட்களாக நடந்தது.இந்த மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களை அங்கு பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது.இதை அடுத்து பெல்ஜியம் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.இதில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் உள்பட 14தீவிரவாதிகள் பிடிபட்டனர்.தலைவர்களை கொல்லும் சதியும் முறியடிக்கப்பட்டது. பிடிபட்டவர்களில் ஒருவர் அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி.அவரது பெயர் மாலிசா எல்.ஆரூத்.இந்த பெண் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்று சமீபத்தில் தான் பெல்ஜியம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.இவரது கணவரும் பின் லேடனின் தீவிர ஆதரவாளர் நெட்டோ படைக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்தி உயிர் விட்டார். கைதானவர்கள் மீது பெல்ஜியம் கோர்ட்டில் விசாரணை நடை பெற்று வருகிறது. |
No comments:
Post a Comment