சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியான நெசவ் மீது பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சரவை முடிவெடுத்தது.
அதன்படி பாலஸ்தீன நாட்டின் காசா கடற்கரையோர பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.போலீஸ் தலைமையகம் உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் மீது இந்த தாக்குதல் நடந்தது.
இத்தாக்குதலில் 155 பேர் பலியாகியுள்ளதாக அன்று இரவு தகவல் வந்தன. மறுநாள் பலியானோர் எண்ணிக்கை 230ஆக உயர்ந்தது. இத்தாக்குதலில் ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.
பலியானோர் எண்ணிக்கை இன்று 345ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்றைய தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இன்று தாக்குதல் நடந்த இடத்தில் மீட்பு பணிக்காக ஆம்புலன்சுகள் சென்றன. அவற்றின் மீதும் குண்டு வீசப்பட்டன.இதில் 5 ஆம்புலன்சு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment