| ||
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட், சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்கள் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், அலைஸ்டர் குக் ஆகியோர் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். 52 ரன்கள் எடுத்த நிலையில் குக் வெளியேறினார். பின்னர் வந்த பெல் 14 ரன்களுக்கும், கேப்டன் பீட்டர்சன் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த காலிங்வுட், 9 ரன்களுக்கு வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தார் ஸ்ட்ராஸ். அபாரமாக விளையாடிய அவர், தனது 13-வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டிராஸ் ஆட்டமிழந்தார். இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் (90 ஓவர்களில்) இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. பிளின்டாப் 18 ரன்களுடனும், ஆண்டர்சன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியத் தரப்பில் ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் தலா 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். | ||
(மூலம் - வெப்துனியா) | ||
Thursday, December 11, 2008
சென்னை டெஸ்டில் ஸ்ட்ராஸ் சதம்: இங்கி. 229/5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment