Friday, December 19, 2008

உலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்:எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றச்சாட்டு

உலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்:எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றச்சாட்டு
 
lankasri.comஉலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் என்று கருத்து கூறியுள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.நியூயார்க்கில் ஆசிய சொசைட்டி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த குழு விவாதத்தில் பங்கேற்று ருஷ்டி கூறியதாவது:

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அந்த நாட்டு அரசு கூறுவது பொய்.பயங்கரவாதம் என்றால் கண்ணைமூடிக்கொண்டு பாகிஸ்தான் என்று கூறும் நிலை உள்ளது.

மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்கள் காட்டுமிராண்டிகள்.அவர்களுக்கு தக்க பதிலடி தர அரசும்,பாதுகாப்புப் படைகளும் தவறிவிட்டன.

தமது மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை ஒழிப்போம் என்று பாகிஸ்தான் கூறுகிறது.அது அப்படி ஒழித்துக் காட்டுமா என்பது சந்தேகம்தான்.

பயங்கரவாதிகளால் சின்னாபின்னம் ஆவப்போவது பாகிஸ்தானே என்பதையும் சொந்த நாட்டின் நலனை கருதியாவது பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்கவேண்டும் என்றும் பாகிஸ்தானை உலகநாடுகள் நிர்பந்திக்கவேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் துணைபுரிந்தவர் பர்வீஸ் முஷாரப் என்று பெருமைப்படப் பேசி அந்த நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் கண்டிக்கப்பட வேண்டியவர்தான்.இந்த நிதியுதவி பயங்கரவாதத்தை ஒடுக்கவே என்று நிபந்தனை ஏதும் விதிக்காமல் புஷ் வாரிக்கொடுத்தார்.முஷாரப் என்ன செய்தார்?

தான் ராணுவ தளபதியாக இருந்தபோது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காஷ்மீரில் சண்டையிட தூண்டுகோலாக இருந்தவர்தான் முஷாரப்.மேலைநாட்டவர் வந்தால் அவர்களுக்கு ஒரு முகமும் தீவிரவாதிகளுக்கு ஒரு முகமும் காட்டியவர் முஷாரப்.

காஷ்மீர் பிரச்னை,குஜராத் கலவரம்,பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றால் மும்பை தாக்குதல் நடந்ததாக எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார்.இது கண்டிக்கத்தக்கது.வேறுவேறு சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கேற்ப பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என்றார் ருஷ்டி.

மும்பை தாக்குதலில் உறவினர்களை இழந்தவரும் எழுத்தாளருமான மீரா காம்தார் உள்ளிட்டோர் இந்த குழு விவாதத்தில் பங்கேற்றனர்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails