Tuesday, December 9, 2008

பொன்மொழிகள்.

மனப்பூர்வமான வாழ்க்கை அமைய 

  • வெற்றி என்பது நம்முடைய திறமை, வாய்ப்பு முதலியவற்றைப் பொறுத்து அமைவதல்ல...நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்று தொண்ணூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான மனோபாவத்துடன் செயல்படுகிறவர்களுக்கே வெற்றி கிடைக்கும். நல்லதே நடக்கும் என்ற உறுதியான மனோபாவம்தான் உண்மையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. 

- ஜார்ஜ் வெயின் பர்க்

  • சோம்பல் ஒரு வீட்டின் உள்ளே நுழையும்போதே மற்ற எல்லாக் கெட்ட குணங்களுக்கும், துன்பங்களுக்கும் கதவைத் திறந்து வைக்கின்றன. 

-அலெக்ஸாண்டர் டூமாஸ்

  • மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருங்கள். பிறர் நம்பும்படியாக உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

 -எஸ்.சர்மா

  • தீமைகள் உங்களை அணுகாமலிருக்க, உங்கள் எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

-சாக்ரடீஸ்

  • மற்றவர்களுக்கு கெடுதல் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.

 -வாலியா

  • உங்கள் அம்மாவிடம் சொல்லிப் பெருமைப்பட முடியாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். 

-எஸ். சர்மா 

  • நாம் நினைப்பதை விட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது. 

-ஸ்டேபிள்ஸ்

  • திட்டவட்டமான இலட்சியமில்லாதவர்கள்தான், இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை செய்பவர்களாக வாழ்கின்றனர். 

- பிரையன் டிரேசி

  • நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால், அறிவைத் தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும். ஆர்வமாக வாழ வெண்டும்.

 -ஹெச்.ஹில்

  • நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தொடர்ந்து கெடுதல் செய்வதன் மூலம், மன்ப்பூர்வமான வாழ்க்கை அமையாது. சேவை செய்வதன் மூலம்தான் மனப்பூர்வமான வாழ்க்கை அமைய முடியும். 

-எஸ். சர்மா

தொகுப்பு: தாமரைச்செல்வி
 
நன்றி:முத்துக்கமலம் இணைய இதழ்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails