Thursday, January 1, 2009

காசா போர் நிறுத்தம் தொடர்பான யோசனையை இஸ்ரேல் நிராகரித்தது

செய்தியறிக்கை
 
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது
காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன

காசா போர் நிறுத்தம் தொடர்பான யோசனையை இஸ்ரேல் நிராகரித்தது

காசாவில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரான்ஸின் யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்றும் போர் நிறுத்தம் என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மார்ட் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீதான பாலத்தீன ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச கருத்தொற்றுமை இருப்பதாக அவர் கூறினார்.

எகிப்தின் தலைநகர் கைரோவில் நடந்த அரபு லீக்கின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், பாலத்தீனத்தில் உள்ள போட்டிக் குழுக்கள் தங்களுக்கிடையேயான வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஹமாஸ் சார்பில் பேசவல்ல ஒருவர், இந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முதலில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
 
http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails