டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ரூ. இரண்டரை கோடி மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி அசோகா சாலையில் பாரதீய ஜனதா தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் அலுவலகம் உள்பட பல்வேறு நிர்வாகிகளின் அலுவலகங்கள் செயல் படுகின்றன. தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு அறையில் கட்சிக்கு சொந்தமான பணம் ரூ.2 கோடியே 60 லட்சம் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த பணம் திடீர் என்று மாயமாகி விட்டது. கட்சியின் தேர்தல் செலவுக்காக இந்தப் பணம் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது பற்றி போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் கடந்த அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது தான் இந்தப்பணம் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக கட்சி ஊழியர்கள் சிலரிடம் தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் விசாரணை நடக்கிறது. கட்சி அலுவலகத்தில் பணம் மாயமாகியுள்ளதால் பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment