ஒரு சீடரின் குரல்
முன் சுருக்கம்.....
...................................புனித தாமஸ் (தோமா) மலை..............................
இயேசுவின் சீடர்களாகிய பன்னிருவரில் ஒருவராகிய புனித தோமா, கி.பி.38 ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். அவர் கப்பலில் பயணம் மேற்கொண்டு கேரளாவின் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். அவ்விடங்களில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார். கேரளாவின் அரசர் கொண்டாபாரஸ் அவருக்கு மிகவும் அதிகமாக உதவிகள் செய்தார். எனவே புனித தோமா அவர்கள் ஏழு கிறிஸ்தவ ஆலயங்களை கேரளாவில் உருவாக்கினார். அவை கொடுங்கலூர், பாளையூர், கோட்டக்காவு, கொக்கமங்கலம், நிராணம், கொய்லான், நிலைக்கால் என்பவை ஆகும்.
அதன் பிறகு புனித தோமா அவர்கள் சென்னை பட்டணத்திற்கு வந்து, மயிலாப்பூரில் தங்கி நற்செய்தியை அறிவித்தார். அவருடைய பிரசங்கங்களால் அனேகர் இழுக்கப்பட்டனர். ஆனார் சிலர் அவருக்கு விரோதிகளாகி, அவரை கொல்ல திட்டமிட்டனர். ஆகையால் புனித தோமா அவர்கள் அவ்விடத்தை விட்டு, சின்ன மலைக்கு சென்றார். அவருடைய பிரசங்களால் தொடப்பட்டு, அவரை பின்பற்றின அனைவரும் சேர்ந்து, மயிலாப்பூரில் அழகிய ஆலயம் ஒன்றை கட்டினர். அவ்வாலயம் சாந்தோம் கத்திட்டரல் என்று இப்போது அழைக்கப்படுகிறது.
புனித தோமா கிபி. 52 லிருந்து 56 வரை சின்ன மலையில் வாழ்ந்தார். மீண்டும் இம்மலையில் அவருடைய உயிருக்கு ஆபத்து இருந்த்தது. ஆகவே அவர் ஒரு குகையில் வாழ்ந்தார். தானே ஒரு கல்லில் சிலுவை ஒன்றை செய்து வைத்து வழிபட்டு வந்தார்.அவ்விடத்தில் அற்புதமாக ஒரு பாறையிலிருந்து அவருக்கு தண்ணீர் கிடைத்தது. இப்போதும் இது புனித நீருற்றாக அழைக்கப்படுகிறது.
ஒரு முறை அவருடைய விரோதிகள் அவரை சூழ்ந்து கொண்டபொழுது அற்புதமாக பாறை ஒன்று உடைந்தது. அவர் தப்பி செல்வதற்கு வழி கிடைத்தது. பின்பு அவர் அந்நாட்களில் பெரிய மலை என்று அழைக்கப்பட்ட சின்ன மலைக்கு வந்து சேர்ந்தார். இம்மலை உச்சியை சென்று அடைய 134 படிகள் இருக்கின்றன. இம்மலை கடலிலிருந்து 300 அடிகளுக்கு மேல் இருக்கிறது. மேலும் சாந்தோம் ஆலயத்திலிருந்து 9 கி.மீட்டர் தள்ளியும் விமான நிலையம் அருகாமையிலும் இருக்கிறது. அவர் ஜெபம் பண்ணிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு நாள் அவருடைய எதிரிகள் அவரை கல்லெறிந்தும் அவருடய முதுகில் ஒரு கல் கத்தியால் குத்தியும், அவரை கொலை செய்தார்கள். மகாதேவன் என்ற அரசர் இந்த செய்தியை கோள்விப்பட்டு, அவ்விடத்திற்கு வந்து, ஒரு ராஜரீகமான் பெரிய நல்லடக்கம் செய்வத்ற்கு ஏற்பாடு செய்தார். விழாயன் என்ற இளவரசரும் அவருடன் வந்தார். புனித தோமாவுடைய உடல் பொன்மயமான ஆடைகளால் மூடப்பட்டு, சான்தோம் ஆலயத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நாட்களில் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கான பயணிகள் வந்து, தரிசிக்கும் இடமாய் உள்ளது. ஒரு சிறிய அவருடைய எலும்பு துண்டு கூட அவருடைய நினைவாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவராக இருந்து, இந்தியாவுக்கு வருகை தந்து, நம்மோடு வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியை பரப்பி, கிறிஸ்துவின் வீரராக இறந்தார். புனித தோமா என்றால் மிகையாகாது...
கிறிஸ்துவுக்கு பின் தோமா............
கிபி. 34ல் இயேசு கிறிஸ்து சீடர்களை விட்டு பிரிந்து பரத்திற்கு சென்ற பிறகு 11 சிஷர்களும் பிரமித்து போய் இவ்வூழியத்தை யார் யார் எங்கு போய் செய்வது என்று தங்களுக்குள் யோசனை பண்ணிக் கொண்டிருந்தனர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நற்செய்தி செல்ல வேண்டும். இதற்காக 11 பேரும் செர்ந்து தங்கள் ஊரில் உள்ள இயேசுவை அறிந்த பல அதிகாரிகளை கூட்டினர். அவர்கள் சுமார் 300 பேர்கள் கூடியிருந்தனர். அக்கால அரசர்கள் பொதுவாக ஒரு அரசனுக்கு பதவி கொடுக்க வேண்டுமென்றால் எல்லோருடைய பெயர்களையும் சிறு சிறு ஓலைகளில் எழுதி அதை ஒன்று சேர்த்து குலுக்கல் முறையில் ஒருவரை எடுக்க சொல்லி தேர்ந்தெடுப்பார். என்வே, நம் நாட்டில் தற்போது உள்ளது போல மக்களாட்சி அப்போது கிடையாது. சீடர்களின் உடன் ஆட்கள் எல்லாம் சேர்ந்து யார் எந்த தேசத்துக்கு செல்வது என்று யோசனை செய்யும்போது 300 பேர்களில் விசேஷித்த கிருபையை அனைவரும் கண்டனர். கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக தோமா எங்கு செல்வாரோ? என்று சிந்தித்து கொண்டிருந்தனர்.
இயேசு உயிர்த்தெழுந்த பிறகும் கூட இயேசுவின் அற்புத அடையாளங்களை விசுவாசிக்காத தோமா அவர் உயிர்த்தெழுதலையும் நம்பவில்லை. இந்த ஆலோசனைக்குழு கூடும்போது சுமார் 7 மணி நேரம் ஏதும் பேசமல் அமைதியான சூழ்னிலையில் இருந்தாராம். 11 சீடர்களில் ஒருவர் ஒரு நல்ல யோசனையை சொன்னார். 11 பேர்களில் பெயரை எழுதி குலுக்கல் சீட்டு போட்டு யாருக்கு எந்த தேசம் வருகிறதோ அங்கு அவர்கள் செல்ல வேண்டும் என்று அந்த வேலையை துவங்கினார்கள். அந்த குலுக்கல் சீட்டை எடுப்பதற்கு பக்கத்து ஊரிலிருந்து ஏசுவின் அற்புதத்தை பெற்ற ஒரு நபரை அழைத்தார்களாம். முதல் மூன்று பேர்களை தேர்ந்தெடுத்த பிறகு நான்காவது பெயராக புனித தோமா என்று எழுதப்பட்டிருந்ததாம். பொதுவாகவே நான்காவதாக யாருடைய பெயர் வருகிறதோ அவார் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவர்களுடைய தீர்மானசீட்டில் எழுதப்பட்டிருந்தது. ஆனல் தோமாவின் பேருடன் இந்தியா என்று வந்தவுடன் தோமாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 7 மணி நேரம் மவுனமாக இருந்தவர் பேச தொடங்கி நான் யூத இனத்தை சேர்ந்தவனாயிற்றே. நான் எப்படி இந்தியாவுக்கு செல்ல முடியும் என்று மறுத்தாராம்.
மற்ற சீடர்கள் அனைவரும் நம் பரம பிதாவிடத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவின் கட்டளையை நீங்கள் மேற கூடாது என்று சொல்லி இந்தியாவுக்கு தோமா செல்ல வேண்டுமென்று ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போதும் அவர் உடனடியாக தன்னுடைய பிரயாணத்தை தொடரவில்லை. நான் இங்கு குறைவாக விட்டிருக்கும் எனது ஊழிய பணியை முடித்துவிட்டு தான் இந்தியாவுக்கு செல்வேன் என்று சொல்லி சுமார் 4 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தார். கிபி. 38ம் வருடம் தோமாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க பாலஸ்தீன மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அவர் புறப்படக்கூதாத படிக்கு 6 தடைகள் காணப்பட்டது. முதல் ஒரு நாளை குறிப்பிடும்போது தோமா சுகவீனப்பட்டுவிட்டாராம். மறு நாளை குறிப்பிடும்போது தன்னுடைய உடன் மக்கள் ஓர் அற்புதத்தை செய்ய வேண்டும் என்று சொல்லி அழைத்து கொண்டு போய்விட்டனர். மூன்றாவது நாளை குறிப்பிடும்போது அவர் ஒரு மரண வீட்டிற்கு செல்ல வேண்டியாதாயிருந்த்தது. நான்காது நாளை குறிப்பிடும்போது தான் பிரயாணம் செல்லும் கப்பல் பழுதடைந்துவிட்டது. 5 வது நாளை குறிப்பிடும்போது சில எதிருகள அவரை தாக்க முயன்றனர். ஆறாவது நாளை குறிப்பிடும்போது அவரை சூழ்ந்திருந்த மக்கள் ஜெபத்துடன் சில மணி நேரங்களில் அவரை கப்பலில் பிரயாணப்பட அமர்த்தினர். அவர் பிரயாணப்பட்டு வரும்போது குறித்த காலத்தில் இந்தியாவை வந்தடைய முடியவில்லை. பல இடங்களில் கப்பல் நிறுத்தப்பட்டு தோமாவினுடைய ஆழ்ந்த ஜெபத்தினால் இயற்கை சூழ்னிலை அவர்க்கு சாதகமாக அமைந்து சுமார் 90 நாட்கள் பிரயாணத்திற்கு பிறகு இந்தியாவின் தென்பகுதியான் கேரள மானிலத்தில் அவர் அடியெடுத்து வைத்தார்.
சிந்தனைக்கு:
இயேசுவுடன் கூட சுற்றித்திருந்த உடன் சீடனுக்கே எத்தனை பாடுகள்! சாதாரணமாக ஓரிடத்திற்க்கு ஊழியத்திற்கு செல்லும் போது எத்தனை தடைகள்! நமது வாழ்க்கையிலும் ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது அதன் மூலம் ஜெயத்தை காண எத்தனை தடைகளை சந்தித்து வெற்றியை மேற்கொள்கிறோம். இந்த இடத்தில் நமக்கு சட்டென்று நினைவிற்கு வருவது, இயேசு சொன்ன வார்த்தை: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்.
சீடர்களின் ஆலோசனை................
சீடர்கள் அனைவரும் கூடி புனித தோமாவை, இந்தியாவுக்கு அனுப்ப ஏகமனதாக தீர்மானம் கொடுத்த பிறகு 10 சீடர்களும் தங்களுக்குள்ளாக சில ஆலோசனைகளை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்குள் ஒரு குழுத் தலைவராக புனித ஏரோன் என்பவரை வரவழைத்து புனித தோமாவை கொண்டு இந்திய தேசம் முழுவதும் இரட்சிப்புக்குள் வர வேண்டும் என்று சொல்லி சுமார் 20 ஜெபகுழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். புனித தோமா குறைவாக வைத்திருந்த அவருடைய உள்ளூர் பணியை செய்து கொண்டிருக்கும் போது இந்த ஜெப குழுக்களில் தலைவராயிருந்த புனிதாய் கயவர்களால் கல்லெரிந்து கொல்லப்பட்டார். இச்சமயத்தில் புனித தோமா இந்த செய்தியை கேட்டு மிக அதிர்ச்சியடைந்தார். கிபி.37ம் ஆண்டு ஒரு ஜெபக்குழுவை சந்திக்க புனித தோமா புறப்பட்டு கொண்டிருந்த போது அவர் அதில் கலந்து கொள்ள கூடாதபடிக்கு தூர்ஸ் நகர் கூட்டாளிகள் தடுத்து நிறுத்தினர். அன்றைக்கு அந்த ஜெபக்குழுவில் இந்தியாவில் தாம் மேற்கொள்ளும் ஊழியத்தை பற்றி பகிர்ந்து கொள்ள திட்டம் வைத்திருந்தார். ஆனால் இறுதியில் அந்த ஜெபகுழுவை புனித பேதுரு நடத்தினார். புனித தோமா இந்தியாவுக்கு பிரயாணப்படாததுக்கு முன் சுமார் 70 நாட்களுக்கு முன்னதாக சீடர்களின் மனதில் ஒரு விரக்தி காணப்பட்டது. சத்துருவானவன் அவர்களுக்குள் இடைப்பட்டு புனித தோமா இந்தியாவுக்கு செல்வதை ரத்து செய்ய வேண்டும் என்று ஆலோசனை பிறப்பித்தான். ஏகமனதாக பத்து சீடர்களும் ஓரே யோசனையில் இருக்க வேண்டிய சூழ் நிலை காணப்பட்டது.
10 சீடர்களும் தாங்கள் தீர்மானித்த தவறான யோசனையை புனித தோமாவினிடத்தில் சொல்ல முடியாமல், அவரை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நாள் திகைத்தனர். இருப்பினிம் தோமாவுக்கு இந்த யோசனை எட்டப்படவில்லை. அவருடைய ஜெபக்குழு நாளுக்கு நாள் ஸ்திரப்பட்ட உடன் சுமார் 11 நாட்களுக்குள் தேவனுடைய திட்டத்தையும் திட்டவட்டமாக உணர்ந்தனர். இதற்கு பிறகுதான் சீடர்கள் கூடி புனித தோமா இந்தியாவுக்கு உடனடியாக புறப்பட வேண்டும் என்று ஊரெங்கும் அறிவிப்பு கொடுத்தனர்.
பல்வேறு தடைகளுக்கு பிறகு சீடர்களின் நல்யோசனைப்படி தோமாவின் பிரயாண ஏற்பாடு செய்தனர்.
புனித தோமாவின் நோக்கம்
கிபி. 38ம் வருடம் தோமா இந்தியாவில் கால் வைத்த உடனேயே ஊழியத்தினிமித்தம் சில திட்டங்களை வகுத்து கொண்டார். முதலில் அவர் கேரள மானிலத்தில் அடியெடுத்து வைத்தவுடன் வியாதிப்பட்ட மக்களும், ஊனமுடைய மக்களும் அவர் கண்முன் தோன்றினர். ஊழிய பாதையில் அடியெடுத்து வைக்கும் போது அற்புதமே முதல் அடிப்படை என்ற நோக்கத்துடன் ஊழியத்தில் செயல்பட துவங்கினார். அன்றைய நாட்களில் இயேசுவின் அற்புதத்தின் மூலம் புனித தோமாவின் வார்த்தையை கேட்க மக்கள் கூடினர். திக்கு தெரியாத காட்டில் தனிமையில் காலடிவைத்த புனித தோமா தனக்குள் அனேக சீஷர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலில் 20 சீஷர்களை உருவாக்க ஆரம்பித்தார். அந்நாட்களில் ஊழிய குழுவாக இருந்தாலும் சரி உலக அரசாட்சியாக இருந்தாலும் சரி ஒரு அவையில் 20 பேர் கொண்ட குழு அவைத்து கொள்வர். இந்த நோக்கத்துடன் அவர் இந்தியாவில் ஊழிய பணியை துவங்க ஆரம்பித்தார்.
இயேசு கிறிஸ்துவின் ஊழியப்பாதை முற்றிலும் பின்பற்றிய புனித தோமா இந்தியாவில் காலடி வைப்பதற்கு முன் நான்கு வருட பாலஸ்தீன தேச ஊழியத்தில் அவர் அதிகம் கண்டது அற்புதத்தின் மூலம் இரட்சிப்புக்குள் வழி நடத்துப்படுவாராம். அதே நோக்கமே இந்தியாவிலும் இருந்தது.
புனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள்
முதன் முதலாக கேரள மானிலத்தை அடைந்து அங்கு சுமார் 14 ஆண்டுகள் ஊழியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இது முதல் ஸ்தலமாகும்.அன்றைய நாட்களில் கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் நெருங்கிய உறவு முறை கொண்ட ஜனங்களாக இருந்ததினால் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் திருமண வாழ்க்கை என்று வரும்போது தங்கள் சொந்த குடும்பத்தில் மட்டுமே திருமணம் செய்வது வழக்கம். இதனால் உறவு முறை திருமணத்தினாஅல் ஊனமுடைய மக்கள் குறிப்பாக பார்வை இழத்தவர்கள் அதிகமாக வசித்தனர். இந்த தேசதில் புனித தோமாவிற்கு அனேக ஜனங்கள் ஆதரவு கொடுத்ததினால் அங்கு அதிக எதிர்ப்புகள் நிகழவில்லை. அதே சயதில் அவர்கள் எளிதில் இரட்சிக்கப்பட புனித தோமாவின் வார்த்தைகள் அனேக உள்ளங்களை தொட்டது. சில நாட்களுக்கு பிறகு இந்தியாவில் வேறு மானிலத்து ஜனங்களையும் சந்திக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, உத்திரபிரதேசத்துக்கு கடந்து சென்றார். இங்கு கிபி. 52ம் வருடம் அங்கு வசித்தவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர் அங்கு ஒரு வருடம் மட்டும் தங்கி திருப்பணியாற்றினார். பிறகு அந்த இடத்தை விட்டு நேராக ஆந்திர மானிலத்திற்கு வந்தார். இங்கு தங்கி ஊழியம் செய்யும்போது திருச்சபைகளை கட்டுவதற்கான ஈடுபாடு அவருக்குள் வந்தது. அன்றைக்கு அங்கு வசித்து கொண்டிருந்த மக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வந்ததினால் பாமரமக்கள் அதிகம் காணப்பட்டனர். இங்கு அவர் ஒருவருடம் தங்கியிருந்த போது நேராக வடமானிலத்தை நோக்கி புறப்பட்டார். தற்போது டில்லி என்று அழைக்கப்படும் இந்தியாவின் தலைனகறுக்கு அருகே பஞ்சாப் ஹரியானா ஆகிய சிறு மானிலங்களில் அவர் தங்கி ஊழியம் செய்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தென்பகுதியில் உள்ள கர்னாடகா மானிலத்தை சந்தித்தார். இங்கு அவர் அந்நாட்களில் வாழ்ந்து குடிசை தொழில் புரியும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். கர்னாடகத்தில் அவர் தங்கியிருக்கும் வேளையில் ஒரு நாள், தான் செய்த ஊழியத்தின் பின்னணியை நோக்கி பார்க்கும்போது, தான் அமைத்திருந்த உடன் சிஷர்கல் குழுவை அழைத்து தான் சென்ற பாதைகளை பின்பற்ற பல இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். இன்றைக்கும் ரோமன் கத்தோலிக்க வரலாற்று காவியத்தில் தோமாவுடைய சீஷர்களுக்கு பின், வந்த 17 தலைமுறையினரில் 17வது தலைமுறையினரை இப்போதும் நம் நாட்டில் காணலாம். கர்னாடக மானிலத்தை விட்டு மீண்டும் கேரளாவுக்கு சென்று அங்கிருந்து தமிழ் நாட்டில் உள்ள சென்னை பட்டணத்தை நோக்கி வந்தார். இது இவர் கால் வைத்த தேசங்களில் ஏழாவது ஸ்தலமாகும்.
இந்தியாவில் பன்னிரண்டு வருட ஊழியம்
கிபி.38ம் வருடம் புனித தோமா இந்தியாவில் தென்முனையாகிய கேரளா வழியாக உட்பிரவேசித்த போது அன்றைய தினம் மக்கள் ஆண்டவராகிய இயேசுவை பற்றி அறியாமலிருந்தாலும், ஏதோ ஒரு வெளி நாட்டு கடவுள் வருகிறார் என்று அவரை பலவிதமாக பேசினார்கள். கேரளாவின் வடமுனை பகுதியில் அன்று இந்த "காரில்" என்ற மலை குன்றின் மேல் அமர்ந்து கொண்டு அவர் பிரசங்கிக்க தொடங்கினார். அவர் பிரசங்கத்தை கேட்டு மனம் திரும்பிய திரு.மாஸ் என்ற சகோதரர் தோமா செய்து வரும் அற்புதங்களையும், அவருடைய நடபடிகளையும் "காரில்" மலை பாறைகளில் எழுத்து வடிவில் பொறிக்க தொடங்கினார். கேரள மானிலத்தில் அவருடைய வார்த்தையை கேளாத மக்கள் அவரை எதிர்த்து நின்றாலும் கர்த்தருடைய பிரசன்னம் அவரோடு இருந்ததினால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மூலை முடுக்குகளிலிருந்தும் அனேக ஊனமுற்றவர்கள் சுகத்தை பெற்றுகொள்ளும்படி அவரிடத்தில் கொண்டு வரப்பட்டார்கள். இதனால் திரளான அற்புதங்களை அவர் இயேசுவின் நாமத்தினால் நடப்பித்தார். சுமார் 3 ஆண்டுகளில் திருச்சபைகளை ஸ்தாபிக்க முடிந்தது. இந்திய மானிலமாகிய உத்திரபிரதேசத்திற்கு அவருக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அவர் ஒரு நாள் கேரளாவில் உள்ள மலையின் மேல் ஜெபிக்கும் போது இந்தியாவின் வடபாகங்களை தேவன் தரிசனமாக காட்டினார். ஒரு நாள் தனக்கென்று ஏற்படுத்தப்பட்ட சீடர்கள் 17 பேர்களுடன் தான் கண்ட தரிசனத்தை குறித்து பேசும் போது தூயமரிய ஜோசப் என்ற போதகர் புனித தோமா செய்த அற்புத அடையாளங்களை விவரிக்கும் திருச்சபை ஒன்றை நிறுவ திட்டம் வகுத்தார். தோமா வடமானிலத்திற்க்கு ஊழியங்களுக்கு வந்த பிறகு திருவனந்தபுரம் என்ற இடத்தில் ஒரு தேவலாயத்தை எழுப்பினார்கள்.
அவர் தொடர்ந்து வடமானில ஊழியஙகளுக்கு செல்லும் போது இயேசு கிறிஸ்துவை அன்று எப்படி திரளான ஜனங்கள் நெருக்கினார்களோ அதை போலவே அனேக ஜனங்கள் அற்புதம் வேண்டி அவரை நாடி சென்றனர். சென்னைக்கும், உத்திரபிரதேசத்திற்கும் அருகே உள்ள மன்சூரி என்ற மலை தொடருக்கும் இடை தூரத்தில் அவருடைய பிரயாண பாதியில் பார்க்கும் போது சுமார் 370 சரீர ஊனமுடைய மக்களுக்கு இயேசுவின் நாமத்தினால் சுகம் கொடுத்தாரென்று சொல்லி கிபி.1520 ல் வாழ்ந்த சூசையப்பர் என்ற போதகர் பல ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.
நிந்தைகளும் போராட்டங்களும்
புனித தோமா சென்னை பகுதியில் ஊழியஞ் செய்யும் போது தனது இரண்டாண்டு அனுபவத்தில் ஒவ்வொரு நளும் ஒரு பகுதியில் அன்று இரவு தங்கிவிடுவார். அவரது வார்த்தைக்கு செவிசாய்க்காத எதிரிகளிடமிருந்து அவர் கிட்டத்தட்ட 30 முறை உயிர்தப்பியுள்ளார் என்று சான்றுகள் கூறுகின்றன. அனேக ஜனங்களால் தூஷணமான வார்த்தைகளை கேட்க சகிக்காமல், ஏதாவது ஒரு திசையில் அவர் மாட்டி கொள்ளும் போது, இரவு சற்று நேரம் தலைசாய்ப்பதற்காக பல இடங்களை தேர்ந்தெடுப்பார். ஆனாலும் அங்கு கொடிய மக்களினால் போராட்டம் காணப்பட்டு அவமானங்களுக்குள்ளாகி விடுவார். இதனால் இரவு நேரங்களில் நடந்து கொண்டே அவர் அந்த ஜனங்களுக்காக வேண்டுதல் செய்த நாட்கள் அதிகம். கிபி 13ம் நூற்றாண்டில் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சுமார் 13000 மக்கள் வசிக்கின்ற இடத்தில் புனித தோமா வாசகம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 33 இரவுகள் அவர் அயராமல் இராமுழுவதும் வேண்டுதல் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் இரண்டு வருட ஊழியத்தில் சந்தித்த நிந்தைகள், போராட்டம் இவற்றையெல்லாம் இன்னும் நமக்கு கிடைக்காத சான்றுகளை நாம் கிடைக்க பெற்றோமாகில் நம்மால் அதை மேற்கொள்ளவே முடியாது. மனதில் தாங்கி கொள்ளவும் முடியாது.
நிந்தைகளும் போராட்டங்களும்
கிழக்கு வங்காள தேசத்தில் கல்கத்தா என்று அழைக்கப்படும் இடத்தில் அவர் ஊழியம் செய்யும் போது சில எதிரிகளால் அவர் தாக்கப்பட்டார். இருப்பினும் அவர் சரீரத்தில் ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் இரவு பகலாக பிரயாணப்பட்டு மீண்டுமாக தனது பழைய சீஷர்களிடத்திற்கு புறப்பட்டு போய் கேரளா மானிலத்தை அடைந்தார். அங்கு அவர் சுமார் 7 மாதங்கள் தங்கி அனேக நாள் உபவாசம் எடுத்து ஜெபித்ததன் மூலம், இன்றைக்கு தமிழகம் என்று அழைக்கப்படும் சென்னை மானிலத்தை வந்தடைந்தார். ஆனால் இன்று சென்னை ஒரு பெரு நகர் என்று அழைக்கப்படுகின்றது. அவர் முதன்முதலில் சென்னையை வந்த அடைந்தவுடன் அவரை திரளான ஜனங்கள் வரவேற்ற போதிலும் அவர்கள் பாமர மக்களும் ஊனமுற்ற மக்களுமே அவர் கண் முன் காட்சியளித்தனர். குறிப்பாக ஒரு விசேஷித்த சம்பவத்தை பார்ப்போமானல் கேரளாவுக்கும் சென்னைக்கும் இடையில் அவர் வழிப்பிரயானத்தின் போது ஒரு பிறவி குருடன் அவரிடத்தில் வந்தபோது தன்ணுடைய குதிரை வாகன வண்டியை நிறுத்திவுட்டு இயேசுவின் நமத்தினால் அவருக்கு சுகம் கொடுத்தாரம். அந்த குருடர் சுகம் பெற்றவுடனே சென்று நேராக தமிழகத்தின் தென் படுதியான கன்னியாக்குமரியை சென்றடைந்தாராம். இன்றைக்கும் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்திப்பெற்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை இப்படிப்பட்ட சாட்சியை விளக்குகிறது. புனித தோமா சென்னையில் மட்டும் தங்கி ஊழியம் செய்த காலங்கள் சுமார் நான்கு வருடங்கள் மட்டுமே.இன்றைக்கு சென்னையில் பரங்கிமலை என்று அழைக்கப்படும் மலைக்குன்று தான் அன்று புனித தோமாவின் ஜெப பீடமாகும்.
நிந்தைகளும் போராட்டங்களும்
சென்னை நகரில் புனித தோமா
புனித தோமா முதன் முதலில் ஊழியத்தை துவங்கும் போது அவர் ஜெபிக்கும் மலை மிகபெரிய மலைக்குன்றாக இருந்தது. புனித தோமாவின் மறைவுக்கு பிறகு பூகம்பம் ஏற்பட்டதினால் அந்த மலையில் ஒரு பகுதி மாதிரம் தற்போது காட்சியளிக்கும் அளவிற்கு ஒதுக்கப்பட்டு நின்றது. முற்றிலும் இயேசுவின் நல்வழிகளை பின்பற்றிய புனித தோமா இயேசுவின் அற்புத அடையாளங்களை கண்டதினால் இவரும் கூட அனேக ஜனங்களை கண்டு மனதுருகினார் என்று சில புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிபி 50 ம் நூற்றாண்டில் சென்னை நகரில் வசித்த மககள் முற்றிலும் விவசாயம் செய்து வந்தவர்களாயிருந்ததினால் வானம் பொழிய தாமத்தித்தால் புனித தோமாவை அணுகி வேண்டுதல் செய்வார்களாம். புனித தோமா மலை மீது அமர்ந்து கொண்டு அதிகாலையில் ஜெபம் செய்யும் போது தன்னுடைய ஜெபத்தை முடிப்பதற்கு மன்னதாகவே வானம் பொழியும். ஊர் மக்கள் பூரிப்படைவார்கள். இன்றைக்கும் நம் மத்தியில் அனேக பிரசங்கிமார்கள் அதிகாலை ஜெபத்திற்கு முக்கியத்துவம் உண்டு என்று சொல்வதை கவனிக்கிறோம்.
பரிசுத்த வேதாகமத்தில் மாற்கு 11:24 ம் வசனத்தின் படி இந்த விசுவாசம் புனித தோமாவினடத்தில் இருந்தது. சென்னையில் அவர் குறுகிய காலம் ஊழியம் செய்தாலும் கூட அயராமல் அவர் கடுமையாக உழைத்தார். அவருக்கென்று ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து கொண்டார். அவரிடத்தில் உடன் சீஷர்களாயிருந்தவர்களில் சுமார் 20 பேர்கள் ஆங்காங்கு பரவி சென்று தமிழ் நாட்டில் சுமார் 20 திருச்சபைகளை எழுப்பினார்கள். ஆனால் அன்றைய கட்டிடங்கள் தொடர்ந்து நிலைபெறவில்லை பல அழிவிற்கு பிறகு கிபி 14ம் நூற்றாண்டில் புனித ஜான் மாண்டோ என்பவர் சில கல்வெட்டு அடையாளங்கலை வைத்து சில திருச்சபைகளை நிறுவினார். இன்றைக்கும் அவைகளில் பட்டணத்தில் புனித தோமா ஊழியஞ் செய்து கொண்டிருக்கும் போது பெரும்பாலும் அவர் கால் நடையாகவே அனேக இடங்களுக்கு சென்றார் என்று வரலாறு கூறுகின்றது.
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=1121&postdays=0&postorder=asc&start=0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment