மதுரையைச் சேர்ந்த சிறுமி உலக சாதனை |
கம்ப்யூட்டர் துறையில் பல வழிகளில் ஆராய்ந்து சோதிக்கக் கூடிய எம்.சி.பி.,தேர்வில் மதுரையைச் சேர்ந்த லவினாஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி வெற்றி பெற்று,புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். கம்ப்யூட்டர் பயிலும் மாணவர்களிடையே,அவர்களது கணிக்கும் திறன், ஆங்கில நுண்ணறிவுத் திறன்,தொழில்நுட்ப முறையில் தீர்வு காணும் திறன்,பிரச்னைகளைத் தீர்ப்பது,முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவற்றை சோதித்துப் பார்க்கக் கூடிய மிக கடுமையான படிப்பு எம்.சி.பி.,இது 25-வயது முதல்30-வயது உடைய எம்.சி.ஏ.,-எம்.பி.ஏ.பி.இ.,மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வு. உலகளவில் நடக்கும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள்,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்சால் பாராட்டப்படுவது வழக்கம்.இந்தத் தேர்வில்,மதுரையைச் சேர்ந்த எட்டு வயது லவினாஸ்ரீ, 1,000 மதிப்பெண்களுக்கு 842 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உலகளவில் சாதனை படைத்துள்ளார்.கடந்த 2005ம் ஆண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது அர்பாகரீம் ரந்தாஹா என்ற சிறுமி இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்று சாதனை படைத்தார். இந்தச் சாதனையை லவினாஸ்ரீ முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தி,இந்தியாவுக்குப் பெருமையை தேடித்தந்துள்ளார்.லவினாஸ்ரீ மூன்று வயதிலேயே 1,330 திருக்குறளையும் ஒப்பிவித்து, "லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" புத்தகத்தில் இடம்பிடித்தவர். ஏழு வயதில் மத்திய அரசின் தேசிய விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.லவினாஸ்ரீயை குடியரசுத் தலைவரும்,பிரதமர் மன்மேகன்சிங்கும் பாராட்டியுள்ளனர்.நேற்று அவர் முதல்வர் கருணாநிதியை,தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். |
Monday, December 15, 2008
மதுரையைச் சேர்ந்த சிறுமி உலக சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment