விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த ராணுவத்துக்கு 7 சதவீதம் கூடுதல் நிதியை ஒதுக்குவதாக அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்துள்ளார். இதன்படி 2009-ம் ஆண்டுக்கு ராணுவ செலவுக்காக மட்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக இலங்கை ராணுவம் பலமுனைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சண்டையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான முக்கிய நகரங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தது. ஆனாலும் இன்னும் கிளிநொச்சிக்குள் நுழைய முடியவில்லை.
கிளிநொச்சியைக் கைப்பற்ற தொடர்ந்து ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று கிளிநொச்சியின் எல்லையையொட்டி அமைந்துள்ள முல்லைத் தீவுப் பகுதியை மையமாகக் கொண்டு இலங்கை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் கிளிநொச்சியின் புறநகர் பகுதிகளிலும், குமுலமுனை என்ற இடத்திலும் இப்படைப்பிரிவினர் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
ராணுவத்தை முன்னேற விடாமல் விடுதலைப்புலிகளும் பதிலடி கொடுத்துள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தியதை இலங்கை ராணுவ அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment