Wednesday, December 10, 2008

நரிமன் ஹவுஸ் தீவிரவாதியிடம் பேசிய பேராசிரியர்!

  

Viswanath
நியூயார்க்: மும்பை நரிமன் ஹவுசில் யூதர்களை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தபோது அவர்களிடம் நியூயார்க்கைச் சேர்ந்த விஸ்வநாத் என்ற பேராசியர் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

பிணயக் கைதிகளை விடுவிக்குமாறும், சரணடையுமாறும் அவர் வைத்த கோரிக்கையை தீவிரவாதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

கடந்த மாதம் 26ம் தேதி யூதர்களின் வழிபாட்டு மையமான நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 3 இடங்களில் பிணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த மையத்தின் தலைவர் ரப்பி அவரது மனைவி, மகன் ஆகியோரும் பிணயக் கைதிகளாகப் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களைப் பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளிடம் பேச அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு யூத மையம் கோரிக்கை விடுத்தது.



இதை மத்திய அரசும் ஏற்றதையடுத்து ரப்பியின் தொலைபேசியை அந்த மையம் 27ம் தேதி காலை தொடர்பு கொண்டது. அவர் மூலமாக தீவிரவாதியுடன் பேசினார் நியூயார்க் யூத மையத்தைச் சேர்ந்த ஒருவர். தீவிரவாதி உருதுவில் பேசியதால் இருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார் பேஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.வி.விஸநாத். இந்துப் பெயராக இருந்தாலும் இவர் யூத மதத்தைச் சேர்ந்தவராவார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

தான் நடத்திய பேச்சு குறித்து விஸ்வநாத் கூறுகையில், தனது பெயர் இம்ரான் என்று கூறிய அந்தத் தீவிரவாதிக்கு தனது செயல் பற்றி எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவன் எங்களுடன் பேச முடியாது என்றும் இந்திய அதிகாரிகளுடன் தான் பேசுவேன் என்றும் கூறினான். ஆனாலும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தோம்.

அப்பேது, எங்கள் சகா ஒருவன் (கஸாவ்) போலீசாரிடம் பிடிபட்டுள்ளான். அவனை விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் சொல்லுங்கள். இது தொடர்பாக நான் இந்திய அரசின் மூத்த அதிகாரியிடம் பேச வேண்டும் என்றான்.

ஆனால், அவன் இஸ்ரேலுக்கு எதிராகவோ, யூதர்களுக்கு எதிராகவோ ஏதும் பேசவில்லை. இந்தியாவிடம் தான் பேசுவேன் என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்தான். மேலும் ரப்பியுடன் பேச எங்களை அனுமதிக்கவில்லை.

நான் இங்குள்ள யாரையும் தாக்கவில்லை, அனைவரும் நலமாக இருக்கின்றனர் என்றான். மிக மிக அமைதியாக பேசியவன், இங்குள்ள பிணயக் கைதிகள் யாரும் உணவோ தண்ணீரோ கேட்கவில்லை என்றான். ஆனால், ஒரு கட்டத்தில் கோபமாகி இங்கு நான் உண்ணவோ, உணவு சப்ளை செய்யவோ வரவில்லை என்றான்.

எத்தனை பேர் பிணயக் கைதிகளாக உள்ளனர் என்பதை சொல்ல மறுத்துவிட்டான். ஒரு கட்டத்தில் பேட்டரி டெளன் என்று கூறி போனை வைத்துவிட்டான். அதன் பிறகு அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

கடைசியில் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டான் என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails