Monday, December 8, 2008

ஐந்து மாநில தேர்தல்-பா.ஜ.க.வின் வீழ்ச்சி காங்கிரஸின் எழுர்ச்சி

சட்டசபை தேர்தல் முடிவு: ராஜஸ்தான்-டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி; மிசோரம் மாநிலத்திலும் வெற்றி

புதுடெல்லி, டிச. 8-

டெல்லி, ராஜஸ் தான், மத்திய பிர தேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவியது. மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரசுக்கும் இடையே பலப்பரீட்சை நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகள் தான் முதலில் வரத் தொடங்கின. அங்கு யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி மளமளவென நிறைய தொகுதிகளை கைப்பற்றி யது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் தனித்து ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. காலை 9 மணிக்கெல்லாம் சுமார் 80 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். மதியம் 12.30 மணிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காங்கிரஸ் பெற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் காங்கிரஸ் வெற்றிக் கனியை ருசித்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துள் ளது.

கடந்த சட்டசபை தேர்த லின் போது பா.ஜ.க. 120 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 70 இடங்களில் மட்டுமே பா.ëஜ.க. வென்றுள்ளது. சுமார் 50 இடங்களை காங்கிரசிடம் பாரதீய ஜனதா கட்சி இழந்துள்ளது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. வுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பா.ஜ.க. மூத்த தலை வர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதிவான 68 சதவீத ஓட் டுக்களில் கணிசமான ஓட் டுக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பியது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வுக்கு இத்தகைய பலத்த அடி விழும் என்று அந்த கட்சித் தலைவர்களே எதிர்பார்க்கவில்லை.

பா.ஜ.க. தோல்விக்கு 2 விஷயங்கள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. முதல் காரணம்- குர்ஜார் இன மக்களிடம் பா.ஜ.க. அதிருப்தியை சம்பாதித்தது. 2-வது காரணம் வசுந்தரராஜே சிந்தியாவின் நிர்வாகத்திற மையின்மை.

வசுந்தரராஜே சிந்தியா சரவர ஆட்சி செய்யாத காரணத்தால், தலை கீழ்மாற்றத்தை சந்தித்துள்ளார். ராஜஸ்தானில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சி 9 இடங்களையும், இதர சிறிய கட்சிகள் 24 இடங்களையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. விடம் இருந்து கைப்பற்றி உள்ளதால் காங்கிரஸ் தலைவர்களிடம் இன்று மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான பிரசாரம் தான் வெற்றியை தேடித் தந்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே ராஜஸ் தானில் மீண்டும் அசோக் கெலாட் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று தெரி கிறது.

இது குறித்து இன்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அசோக் கெலாட் கூறுகையில், "புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்'' என்றார்.

ராஜஸ்தானை போலவே டெல்லி மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றியை ருசித்தது. ஷீலாதீட்சித்தலைமை யில் அங்கு தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் `ஹாட்ரிக்' அடித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்ட சபைக்கு 69 இடங்களில் தேர்தல் நடந்தது. 69 இடங்களின் முடிவும் இன்று மதியம் தெரிய வந்தது. 35 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 28 இடங்களைப் பிடித்தது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களையும், இதர கட்சிகள் 3 இடங்களையும் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்க ஒரு இடமே தேவைப்படுகிறது. சுயேட் சைகள், சிறிய கட்சிகள் துணையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. ஷீலா தீட்சித் 3-வது முறையாக முதல்வர் ஆகிறார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி டெல்லி தேர்தல் நடந்தது. தீவிரவாதிகள் பற்றிய உணர்வு தேர்தலில் எதிரொ லித்து காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருதினார்கள். ஆனால் அனைவரது ïகங் களையும் டெல்லி தேர்தல் முடிவு தவிடு பொடியாக்கி விட்டது.

டெல்லியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது காங்கிரஸ் மூத்த தலை வர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினார்கள்.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2 தேர்தல் களில் அந்த கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வந்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடும் சவாலை கொடுத்தது. சோனியா மிசோரமில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தார்.

இதன் பயனாக மிசோரம் மாநிலமும் காங்கிரஸ் வசம் வந்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு தனித்து ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை.

இன்று மதியம் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்தை மிக, மிக எளிதாக எட்டியது. மிசோ தேசிய முன்னணி 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க. அங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறும் நிலை யில் இல்லை.

5 மாநிலங்களில் ராஜஸ் தான், மிசோரம், டெல்லி ஆகிய 3 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ராஜஸ்தானில் பெற்ற வெற்றியை காங்கிரசார் கோலா கலமாக கொண்டாடி வருகிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை தக்க வைத்துள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails