ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்த நிலையில் அந்நாட்டில் பரவியுள்ள காலரா நோயால் கடந்த 3-மாதங்களில் மட்டும் 1,200-க்கும் மேலானோர் பலியாகி விட்டனர். 20-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதனால் சர்வதேச நாடுகள் முகாபே பதவி விலகவேண்டும் என்று தீவிரமாக வற்புறுத்தி வருகின்றன. எனினும், "ஜிம்பாப்வே எனக்குத்தான் சொந்தம்.எனவே,அதிபர் பதவியில் இருந்து விலகுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.வேண்டுமென்றால் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் பதவி தரத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் முகாபேயின் இந்தக் கோரிக்கையை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் டிவாங்கிரை மறுத்துவிட்டார். "ஆளும் கட்சியினரால் கடத்தப்பட்ட எங்களது 40-தலைவர்களையும் விடுவிக்காதவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் கூறியுள்ளார். |
Sunday, December 21, 2008
பதவியிலிருந்து விலக மாட்டேன்;ஜிம்பாப்வே அதிபர் முகாபே பிடிவாதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment