விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரி விநோதினி, தனது கணவர் ராஜேந்திரனுடன் கனடாவில் வசிக்கிறார்.
கனடாவின் ரொரண்டோ நகரின் கிழக்கு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், நேஷனல் போஸ்டிற்கு தனது வாழ்க்கை குறிப்புகளை தெரிவித்துள்ளார். அப்போது, தனக்கும் இளைய சகோதரர் பிரபாகரனுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும்,
''என் சகோதரர் பிரபாகரன், அப்பா போலவே இரக்க குணமுள்ளவர். அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. வீடு முழுவதும் புத்தகமாகத்தான் இருக்கும். அந்த வயதில் அவர் சாதாரணமாகத்தான் இருப்பார். பின்னாளில் அவர் இப்படியெல்லாம் போராட்டங்களில் ஈடுபடுவார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை.
இலங்கையை விட்டு கனடாவிற்கு புலம் பெயர்ந்த பிறகு வீட்டினருடன் தொடர்பு வைத்துக்கொண்டேன். சகோதரருடன் மட்டும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.என் அப்பா ஒரு காரியத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டார்.
அதே போல்தான் சகோதரர் பிரபாகரனும். தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரிலிருந்து விலக மாட்டார். அவரை வெகு சீக்கிரத்தில் கொல்லப்போவதாக இலங்கை ராணுவம் கூறி வருகிறது. அவர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். அவ்வளவு சீக்கிரத்தில் அவரை கைது செய்ய முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment