Sunday, December 21, 2008

சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு

 

   

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மூலம் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.     

விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் அவர்கள் கைப்பற்றியிருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர். 

இதன் பின்னர் அந்த இரண்டு கிலோ மீற்றர் நீளமான முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.

இந்த பகுதியிலிருந்து படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடைப்பட்ட களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.

இந்த அதிரடித் தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails