கடந்த இருநாட்கள் மோதலில் 120 படையினர் பலி. 280 பேர் படுகாயம்: மலையாளபுரம் வரை படையினர் பின்நகர்த்தல்: புலிகள் |
|
|
![]() |
கிளிநொச்சிக்கு மேற்குப்புறமான புதுமுறிப்பை நோக்கியும். தெற்குப்புறமான அறிவியல் நகரை நோக்கியும் முநகர்வை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத்தினரின் இப்பாரியபடை நகர்வை வெற்றிகரமாக முறியடித்த தமிழீழ விடுதலைப் புலிகள் புதன்கிழமை இரவு இராணுவத்தினரை மலையாளபுரம் வரை பின்நகர்த்தியுள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலில் 120 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 280 க்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் சிலர் புதிதாக படைக்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்களும் அடங்குகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் இம்மோதல்களில் படைத்தரப்பில் 23பேர் உயிரிழந்ததாகவும் 27 புலிகள் கொல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இதன்போது கொல்லப்பட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட சடலங்கள் யுத்த சூனிய பிரதேசங்களில் சிதறிக்கிடப்பதாக படைத்தரப்பினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தெரிவித்துள்ளனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
No comments:
Post a Comment