Monday, December 1, 2008

‘இளம் சிங்கங்களை’ உருவாக்கும் டேவிட் சிவலிங்கம்.

பல காற்பந்துக் குழுக்களில் 1997ம் ஆண்டிலிருந்து பயிற்றுவிப்பாளராகவும் துணைப் பயிற்றுவிப்பாளராக வும் பணி புரிந்திருக்கிறார் திரு டேவிட் சிவலிங்கம்.
பல வெற்றி தோல்விகளைப் பார்த்திருந்த போதிலும், தற்சமயம் சிங்கப்பூர் காற்பந்துச் சரித்திரத்திலும் இடம் பிடித்துவிட்டார் டேவிட்.
அவருக்கு அந்தப் பெருமையைத் தேடிக் கொடுத்திருக் கிறது 18 வயதுக்கு உட்பட்ட தேசியக் காற்பந்துக் குழு.
முதல் முறையாகச் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் 'ப்ரைம் லீக்'-கின் வெற்றியாளராக வாகை சூடியிருக்கிறது திரு டேவிட் பயிற்றுவிக்கும் இக்குழு.
சிங்கப்பூரின் எஸ் லீக் போட்டிகளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் போட்டிதான் இந்த ப்ரைம் லீக். இதில் மற்ற அனைத்து குழுக்களுமே 23 வயதுக்குட்பட்ட இளையர்களைக் கொண்டவை.
இளையர்களை அதிகம் கொண்ட குழுவாக இருந்தும் கூட ஒன்பது வருடங்களில் முதல் முறையாக பட்டியலில் முதலிடம் பிடித்து வெற்றியாளர் கிண்ணத்தை வென்று இருக்கிறது டேவிட்டின் குழு.
1980களில் சிங்கப்பூரின் தேசியக் காற்பந்துக் குழுவில் விளையாடியவர் டேவிட் சிவலிங்கம். பயிற்றுவிப்பாளர் ஜித்தா சிங் தலைமையில் மூத்த ஆட்டக்காரர்களுக்கு நடுவே இளைய ஆட்டக்காரரகத் தாம் சேர்ந்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார் டேவிட்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் ஆயுதப்படைக் காற்பந்துக் குழு, தெம்பனீஸ் காற்பந்துக் குழு ஆகிய வற்றின் துணைப் பயிற்றுவிப்பாளர், 18 வயதுக்கு உட்பட்ட தெம்பனீஸ் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என அதிக அனுபவம் கொண்டவர் திரு டேவிட்.
தம் குழுவில் விளையாடும் 25 இளையர்களிடமும் பாசமிக்க தந்தையாய்ப் பழகும் இவர், திடலில் இறங்கிவிட்டால் சீரிய ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கிறார்.
இந்தப் பிரைம் லீக் வெற்றியைத் தொடர்ந்து, இவரது குழுவிலிருந்து 10 பேர் 'யங் லயன்ஸ்' குழுவில் இடம் பிடித்திருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாகாகப் பெருமிதம் கொள்கிறார் திரு டேவிட்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails