சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான்கள் தடை:பாகிஸ்தான் எல்லையில் அட்டூழியம் |
|
பாகிஸ்தானில் சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.தங்களின் உத்தரவை யாராவது மீற முற்பட்டால்,அவர்கள் கொல்லப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க,தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர். அதே பாணியை தற்போது பாகிஸ்தானின் வடமேற் குப் பகுதியிலும் அமல்படுத்தி வருகின்றனர்.சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என எச்சரித்துள்ள தலிபான்கள், "மீறுவோர் மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.மேலும்,பள்ளிகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் அல்லது தீ வைத்து எரிக்கப்படும்" என,எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக பாகிஸ்தான் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியின் தலிபான் உதவி கமாண்டர் ஷா தவ்ரன் மேலும் கூறியுள்ளதாவது: சிறுமிகளை பள்ளிக்கு அனுப்புவதை ஜனவரி 15ம் தேதிக்குள் நிறுத்தி விட வேண்டும்.மேலும்,அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சிறுமிகளை பள்ளியில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.இல்லையெனில்,அனைத்து பள்ளிகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் அல்லது தீ வைத்து எரிக்கப்படும்.இவ்வாறு ஷா தவ்ரன் கூறியுள்ளார். இந்த தடை உத்தரவை வெளியிடும் முன்னர்,சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சிறுமிகள் செல்ல விடாமல் தலிபான்கள் தடுத்தனர்.மேலும்,பள்ளிக்கு வரக்கூடிய ஆசிரியைகளும் பர்தா அணிந்து வர வேண்டும் என,கடும் உத்தரவிட்டனர். சுவாத் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக பாக்.,படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினாலும்,தலிபான்களின் கெடுபிடி காரணமாக இப்பகுதியில் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. "பெண்கள் கல்வி கற்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது" என,தெரிவித்துள்ள இப்பகுதி தலிபான் கமாண்டர் மவுலானா பாசியுல்லா,பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் பதியப்பட்ட வீடியோ,ஆடியோ "சிடி"க்கள் மற்றும் "விசிடி'க்கள் விற்கும் கடைகள் மீதும்,முடி திருத்தும் கடைகள் மற்றும் சைபர் கபேக்கள் மீதும் தாக்குதல் நடத்தும்படியும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். |
No comments:
Post a Comment