உலகமெங்கிலும் இனக்கலவரங்கள் மேலோங்கிவிட்டன. இதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடந்த கூட்டத்தில் குண்டு வைத்து அராஜகம் செய்திருப்பது உலகையே வருந்தவைத்திருக்கிறது.
ஈராக்கில் கிர்குக் நகரில் ஒரு ஓட்டலில் குர்தீஷ் இன தலைவர்கள், இனக் கலவரத்தை தடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். பல்வேறு இனத் தலைவர்கள் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தனர்.
அந்த ஓட்டலில் ஈத் பண்டிகை விழாவை யொட்டி சிறப்பு விருந்து நிகழ்ச்சியும் இன்னொரு அரங்கில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ஓட்டலுக்குள் மனித வெடிகுண்டாக புகுந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்துள்ளான். இதில் பழங்குடி இன தலைவர்கள், விருந்து நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பேர் உடல் சிதறி பலியாகியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment