வங்காளதேசத்தில் ஒரு தாஜ் மஹால்:இந்தியா எதிர்ப்பு |
|
இந்தியாவில் உள்ள ஆக்ராவில் ஷாஜகான் மன்னனால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலகப்புகழ் பெற்ற கட்டிடம் ஆகும்.இது போன்ற கட்டிடத்தை வங்காளதேசத்தில் டாக்கா நகர் அருகே ஒருவர் கட்டி இருக்கிறார்.வங்காளதேச சினிமா டைரக்டர் ஆன அவர் பெயர் அஷானுல்லா மோனி.அவர் இதை 29-கோடி ரூபாய் செலவில் கட்டி இருக்கிறார். 1980-ம் ஆண்டு ஆக்ராவுக்கு சென்றபோது தான் அவருக்கு தாஜ்மஹால் போல ஒரு கட்டிடத்தை கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.5-ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தை அவர் கட்டினார்.இதற்காக இத்தாலியில் இருந்து சலவை கற்களையும்,பெல்ஜியத்தில் இருந்து வைரங்களையும் இறக்குமதி செய்தார்.160-கிலோ வெண்கலத்தையும் வாங்கினார். இப்போது தாஜ்மஹால் போன்ற கட்டிடத்தை அவர் கட்டி முடித்து விட்டார்.அது தாஜ்மஹாலை செராக்ஸ் எடுத்தது போல இருக்கிறது. இப்படி ஒரு போலி தாஜ்மஹாலை உருவாக்கியது இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.காப்பி ரைட் உரிமையை மீறியதாக வழக்கு தொடரலாமா என்பது பற்றி இந்தியா ஆலோசித்து வருகிறது. சரித்திர புகழ் பெற்ற சின்னங்களை நகல் எடுக்கக்கூடாது என்று டாக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். |
No comments:
Post a Comment