மன்னாரில் ஆண்டான் குளம் பகுதியில் உள்ள பரப்புக்கடந்தான் என்னும் காட்டுப் பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் சுட்டத்தில் இரு ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு நடந்ததாகக் கூறப்படும் இச் சம்பவம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இராணுவத்தினருக்கு இடையே நடந்த ஒரு சிறு மோதல் என இலங்கை அரசு தற்போது தெரிவித்துள்ளது. இருப்பினும் இத் துப்பாக்கிப் பிரயோகத்தை யார் மேற்கொண்டார் என்பது பற்றி இராணுவம் எதனையும் கூற மறுத்துள்ளது. இதனிடயே இச் சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என அதிர்வின் வன்னி நிருபர் தெரிவித்தார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment