புலிகளின் தமிழீழ வான்படையின் வீரர் ஒருவர் அரசின் ஆளில்லா வேவுவிமானம் ஒன்றை குறிதவறாமல் சுட்டுவீழ்த்தினார் என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டில், அதாவது ஈழப் போர் நான்காம் கட்டம் தொடங்குவதற்கு முன்னர், அரசுக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் ஒன்றை தமிழீழ வான்படைவீரர் ஒருவர் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியமையை அங்கீகாரமுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அதிகாரி தமது பெயரை வெளியிட விரும்பவைல்லை. புலிகளின் வான்படைவிமானத்தில் இருந்தவாறே அந்த புலிவீரர் குறிதவறாமல் சுட்டு வீழ்த்தியுள்ளார். புலிகளின் வெற்றியை வெளியில் அறிவிக்க விரும்பாத அரசு இச்செய்தியை மிக ரகசியமாகப் பேணிவந்தது எனக் கூறப்படுகிறது.
ஏ-9 சாலையின் கிழக்கேயுள்ள ஓடுபாதைகளில் இயங்கிவந்த புலிகளின் விமானம், இஸ்ரேல் தயாரிப்பான Searcher Mark II ஐக் கொண்டிருந்ததோடு இது தொடர்ச்சியான கண்காணிப்பினையும் மேற்கொண்டு வந்துள்ளது. ஆனால் இவ்வாறு கண்காணிக்கப்பட்டு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட வேவு விமானமானது, தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே காணாமல் போய்விட்டதாக இலங்கை வான்படையினர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெதுவாக செல்லும் ஆளில்லா வேவுவிமானத்தைக் குறிவைக்கலாம் எனினும், இது மிகவும் இலகுவான ஒரு காரியம் அல்ல என அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த விமானம் சுடப்பட்ட வேளையில், இலங்கை வான்படையினர் புலிகள் கட்டமைத்து வந்த விமானத் தளங்களைக் கண்காணித்து வந்ததாகவும் அவர் கூறினார்.
தற்போது வன்னியில் மீட்கப்பட்ட சில ஆவணங்களில் மேற்படி தாக்குதல் குறித்து புலிகள் விவரமாக எழுதி வைத்துள்ளனர் என ராணுவத் தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு முன்னர் பல ஒத்திகைகளைப் புலிகள் நடத்தியுள்ளனர். குறிதவறாமல் சுடும் வீரர் அந்த வேவு விமானத்தைச் சுடும்வரை புலிகளின் விமானம் அதைப் பின்தொடர்ந்து சென்றுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள், அதன் இயந்திரம், சிறகுகள், கமரா, சக்கரங்கள், குண்டுகள் உட்பட பல, புதுக்குடியிருப்பின் கப்புகுளம் பகுதியிலிர்ந்து கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டதாகவும் இலங்கை வான்படை கூறியுள்ளது.
போர் நிறுத்த காலத்தில் அரசாங்கம் வேவு விமானங்களையோ, வேவு கப்பல்களையோ பயன்படுத்தக் கூடாது என புலிகள் வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு அவர்கள் பயனபடுத்தின் அது போர்நிறுத்த் மீறல் எனக் கருதப்படும் என்பதால், இந்த வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து இலங்கை அரசு ஸ்கண்டினேவியன் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கும் கொண்டு செல்லவில்லை.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment