Sunday, October 25, 2009

நக்கீரன் ……!!! ஏன் இப்படி?

 

nak41 ஆயிரம் ஈழத்தமிழர்கள் இன்று சொந்த இடத்திற்கு திரும்பினர்

இலங்கை முகாம் தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அவர்கள் முகாமை சுற்றி பார்த்து குறைகளை கேட்டறிந்தனர்.

அங்கே இக்குழுவினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசி அவர்கள் முகாமில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் விரைவில் விடுவித்து சொந்த ஊரில் குடியமர்த்தும்படி வற்புறுத்தினார்.

எம்பிக்கள் குழிவின் கோரிக்கைக்கு பதிலளித்த ராஜபக்சே, 3லட்சம் பேரில் இன்னும் 2 வாரத்தில் 58 ஆயிரம் பேரை சொந்த ஊரில் குடியமர்த்துவோம் என்று உறுதி அளித்தார்.

அவர் மேலும், குறுகிய காலத்திற்குள் அகதிகள் அனைவரும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்படுவர் என்றும் அறிவித்தார்.

அறிவித்தபடி முகாம் அகதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இன்று 12 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேரை முகாமில் இருந்து விடுவித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ. 20 ஆயிரம் பாங்கி சேமிப்பு, 6 மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள், படுக்கை விரிப்புகள், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதே நேரம் யாழிலிருந்து ஈ பி டி பி யினரின் செய்தி படங்களோடு கீழ்கண்டவாறு இருக்கிறது:

வவுனியா இருந்து யாழ் வந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து நிதியுதவிகளை வழங்கினார்

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரில் சென்று அவர்களது நிலைமைகள் பற்றி கேட்டறிந்தார்.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த இம்மக்கள் இன்று (22) பிற்பகல் துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அம்மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீளக்குடியமர்வதற்கான உதவித் தொகைiயான 5000 ரூபாவை வழங்கியதுடன் மீதி 20000 ரூபாவை அம் மக்களது பெயர்களில் வங்கியில் வைப்பிலிடப்படும் என அறிவித்ததோடு 6 மாத கால உலர் உணவு நிவாரணம் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் தொழிலை முன்னெடுப்பதற்கான உபகரணங்கள் என்பன வழங்கப்படவுள்ளதாகவும் அம்மக்களிடம் தெரிவித்தார்.
—-

அதே நேரம் யாழ் உதயனின் செய்திகளின் படி..

இன்று 1,007 பேர் அழைத்துவரப்படுவர்

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 1,007 பேர் இன்று யாழ்ப்பாணம்

கொழும்பு, ஒக்ரோபர் 22
வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 1,007 பேர் இன்று யாழ்ப்பாணம்

அழைத்து வரப்படவிருக் கின்றனர் என யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்றைய தினம் இடம் பெயர்ந்தவர்கள் எவரும் வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்துவரப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது
—–

தமிழ்வின் இணையத்திலிருந்து வன்னி மீள் குடியேற்றம் தொடர்பான செய்தி..

முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நாளை ஆரம்பம்:முதற்கட்டமாக 1000பேர் குடியமர்வு

[ வியாழக்கிழமை, 22 ஒக்ரோபர் 2009, 06:48.20 AM GMT +05:30 ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.
சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

அனிஞ்சியன்குளம் அரசினர் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி, பாலிநகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு படிப்படியாக அவர்களது வீடுகளில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மீளக்குடியமரும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கு செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்சார விநியோகம், வீதிப் போக்குவரத்து ஆகியன ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவற்றைத் துப்புரவு செய்து, தேவையானால் தற்காலிகத் தகரக் கொட்டில் அமைத்து படிப்படியாக மீளக்குடியமர்வார்கள்.

இம்மக்கள் பலரது வீடுகள் சேதமடையாமல் இருக்கின்றன. பல வீடுகள் கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன. இவற்றை அவர்கள் படிப்படியாகத் திருத்தி அமைத்துக் குடியேறுவார்கள். இந்தப்பகுதியில் மக்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பற்றைகள் வளர்ந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்வதில் அவர்கள் முதலில் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் சமைத்த உணவு வழங்குவதற்கும், வேண்டிய ஏனைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகும் நடவடிக்கையின் மூலம் 4450 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். இது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் படிப்படியாகக் கட்டம் கட்டமாக அந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளார்கள். 30 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூனகரி, ஜெயபுரம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன" என்றார்

ஆக தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா??
யாரையாவது திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றனவா?
தமிழகத்துக்கு ஈழத்தமிழர் நிலைமைகள் தவறாகவே கொண்டு செல்லப்படுகின்றனவா?கருணாநிதியின் அரசியலில் ஈழத்தமிழினம் பகடைக்காயா?

நாளைக்கே …. இலங்கையில் அனைத்து முகாம்களிலிருந்தும் அகதிகள் அனவைருமே மீள தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் எனவும் செய்திகளை எதிர்பார்க்க வேண்டுமோ.. ?

அப்படிஎன்றால் முகாம்களில் இருக்கும் எம்முறவுகளின் கதை இவ்வளவு தானா? முடிந்தே விட்டதா?

மீளக் குடியமர்த்தப்படுவார்களெனும் செய்திகள் ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட போதிலும் இது வரை அச்செய்திகளில் முன்னேற்றமில்லை.. தொடர்ச்சியாக முகாம்களை மாற்றி மாற்றி எம்மக்களைத் தங்க வைக்கிறார்களே தவிர நிரந்தரமாக மக்களின் சொந்த ஊர்களிளல்ல….


source:tamilspy
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails